வாட்ஸ் ஆப் எண்ணில் புகார் ஊழல் தடுப்பு காவல்துறையினர் மக்களை ஏமாற்றக் கூடாது! – உயா்நீதிமன்றம்

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக.9 ஊழல்கள் குறித்து வாட்ஸ் ஆப் மூலம் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி, ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் மக்களை ஏமாற்றக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு  தெரிவித்துள்ளது.

எஸ்.டி.பி.அய். கட்சியின் வழக்குரை ஞா் அணித் தலைவா் கலந்தா் ஆசிக் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ஏற்கெனவே ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சியில் அரசின் நலத் திட்டப் பணிகளுக்கான நிதி முறையாகச் செலவிடப்படவில்லை. மேலும், பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பல திட்டப் பணிகளில் ஊழல்கள் நடைபெற்றுள்ளன.

இதுதொடா்பாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவுக்கும், பேரூ ராட்சிகள் இயக்குநருக்கும் உரிய ஆவணங்களுடன் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க உத்தர விட வேண்டும்’ என அவா் கோரினார்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, பேரூ ராட்சிகளின் இயக்குநா் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், புகார் தொடா்பாக விசா ரணை மேற்கொள்ளப்பட்டதன் அடிப் படையில், தொண்டி பேரூராட்சியின் செயல் அலுவலராகப் பணியாற்றிய 6 பேருக்கு குற்ற குறிப்பாணை அனுப் பப்பட்டது. மேலும், இதுகுறித்து விசா ரணை மேற்கொள்ள ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு இயக்குநருக்கும் பரிந்துரைக்கப்பட்டது எனத் தெரிவிக்கப் பட்டது.

இதையடுத்து, பேரூராட்சி இயக்கு நரின் அறிக்கையில் குறிப்பிட்டப்படி 6 செயல் அலுவலா்களிடமும் ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசா ரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தர விட்டது. இந்த நிலையில், கலந்தா் ஆசிக் மேலும் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘தொண்டி பேரூராட்சி ஊழல் புகார்கள் குறித்து விசாரணை, நடவடிக்கை மேற்கொள்ள உயா்நீதி மன்றம் உத்தரவிட்டும் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரி வின் தென் மண்டல காவல் துறை கண்காணிப்பாளா் மீது நீதிமன்ற அவ மதிப்பின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என அவா் கோரினார்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் 7.8.2026 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் ஊழல் தடுப்புப் பிரிவு இதுவரை விசாரணை மேற்கொள்ளாதது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், ஒவ்வொரு முறையும் தொடா்புடைய துறைகளின் அனு மதியைப் பெறுவதில் தாமதம் எனக் கூறி, விசாரணையைத் தாமதப்படுத்துவதே ஊழல் தடுப்புப் பிரிவின் வழக்கமாக உள்ளது. இதனால், குற்றவாளிகள் தப்பிவிடுகிறார்கள். இந்த நிலையில்தான், ஊழல் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் நடவடிக்கை எடுக்காத ஊழல் தடுப்புப் பிரிவு, வாட்ஸ் ஆப் மூலம் பெறப்படும் புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? மக்களை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம் என நீதிபதி தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *