மாலை அணிவித்து மரியாதை

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜெயலட்சுமி நகரில் குறள் நெறியாளர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகத்தின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஏழாவது நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் படிப்பகச் செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் தலைமை வகித்தார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் முன்னிலையில் வகித்தார். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் மாநில செய்தித் தொடர்பாளர் அ.ரகமதுல்லா மாலை அணிவித்தார். இந்நிகழ்வில் மாநில மாணவர் கழகச் செயலாளர் இரா.செந்தூரப் பாண்டியன், பேராசிரியர் இரா.குட்டிமணி, அமிர்தா திராவிட செல்வம், வெள்ளூர் முருகேசன், மாரிமுத்து, கோவிந்தன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *