மூடநம்பிக்கையின் கோரம் ‘அஸ்தி’ கரைக்கச் சென்ற மூவர் உயிரிழந்த பரிதாபம்!

கரூர், ஆக. 6- கரூர் அருகே தாயின் ‘அஸ்தி’ யைக் கரைக்​கச் சென்​ற​போது, காவிரி ஆற்​றில் தேங்​கி​யிருந்த நீரில் மூழ்கி சகோ​தரர்​கள் உள்​ளிட்ட 3 பேர் உயி​ரிழந்​தனர்.

கரூர் நரசிம்​மபுரத்​தைச் சேர்ந்​தவர் குப்​பு​சாமி​யின் மனைவி தேவகி. இவரது மகன்கள் சுரேஷ் (65), அருணன் (60). இரு​வரும் ஓய்​வு​பெற்ற வங்கி ஊழியர்​கள். வயது மூப்பு காரண​மாக தேவகி அண்​மை​யில் உயி​ரிழந்​தார். இதையடுத்து அவரது அஸ்​தியை காவிரி ஆற்​றில் கரைப்​ப​தற்​காக மகன்​கள் சுரேஷ், அருணன் ஆகியோர் உறவினர்களு​டன் கடந்த 4.8.2026 அன்று நெரூர் காவிரி ஆற்​றுக்​குச் சென்​றனர்.

‘அஸ்​தி’யைக் கரைத்துவிட்​டு சுரேஷ், அருணன், உறவினர் சீனிவாசன் (64) உள்​ளிட்ட 7 பேர் ஆற்​றில் குளித்துள்ளனர். அப்​போது, மூவரும் எதிர்​பா​ராத​வித​மாக நீரில் மூழ்​கினர். இதைப் பார்த்த மற்​றவர்​கள் கூச்சலிடவே, அரு​கில் இருந்​தவர்​கள் 3 பேரை​யும் மீட்டு, தனி​யார் மருத்​து​வ​மனைக்குக் கொண்டு சென்​றனர். ஆனால், அவர்​கள் ஏற்​கெனவே உயி​ரிழந்​து​விட்​ட​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர்.

இதுகுறித்து வாங்கல் காவல்துறையினர் வழக்குப்​பதிவு செய்து, உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *