கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் 342 தொழில்நுட்பக் கல்லூரிகள் மூடல்

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 6- கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 45 கல்லூரிகள் உட்பட இந் தியாவில் மொத்தம் 342 தொழில்நுட்ப கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

தொழில்நுட்ப கல்வி கவுன்சில்

இந்தியாவில் பொறி யியல், தொழில்நுட்ப, மேலாண்மை மற்றும் இதர தொழில்கல்வி நிறு வனங்கள் இயங்குவதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஜி.சி.டி.இ) அங்கீகாரம் பெறுவது சட்டபூர்வமாகவும், மாணவர்களின் எதிர்கால நலனுக்கும் மிக அவசியமானதாகவும் உள்ளது.

இந்தியாவில் எந்த வொரு தொழில்நுட்பக் கல்லூரி, பொறியியல் கல்லூரி அல்லது மேலாண்மை படிப்பு வழங்கும் கல்லூரியை நடத்த வேண்டுமானால், அது ஏ.ஜி.சி.டி.இ.-ன் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். அனுமதி பெறாத நிறுவனங்கள் சட்டவிரோதமானதாக கருதப்படும்.

கல்லூரிகளில் மாண வர்களுக்கு கற்பிக்கப்படும் கல்வித்தரம், தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்கள், நூலகம் மற்றும் தகுதியான பேராசிரியர்கள் இருப்பதை ஏ.ஜி.சி.டி.இ. வழிகாட்டுதல்களை வழங்கி அதை உறுதி செய்கிறது. ஏ.ஜி.சி.டி.இ. அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் வழங்கப் படும் பட்டங்கள் மற்றும் டிப்ளமோ சான்றிதழ் களுக்கு மட்டுமே தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் முறையான மதிப்பு உண்டு.

342 கல்லூரிகள் மூடல்

அந்தவகையில் அகில இந்திய தொழில்நுட்பகல்வி கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பகல்வி நிறுவனங்களில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 342 தொழில்நுட்ப கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கல்லூரிகளில் சேரும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருவது, ஏ.ஜி.சி.டி.இ. நிர்ணயித்த உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகுதியான பேராசிரி யர்கள் இல்லாதது, கல்வி நிறுவனங்கள் முறையான வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறியது போன்ற வையே கல்லூரிகள் மூடப்பட்டதற்கான காரணங்களாக சொல்லப்படுகின்றன.

342 கல்லூரிகளில் மராட்டிய மாநிலத்தில் அதிகபட்சமாக 52 கல்லூரிகள் மூடப் பட்டிருக்கின்றன. அதற்கடுத்தபடியாக உத்தரபிரதேசத்தில் 54 கல்லூரிகள், மத்திய பிரதேசத்தில் 53 கல்லூரிகள், தமிழ்நாட்டில் 45 கல்லூரிகள், குஜராத் தில் 22 கல்லூரிகள், பஞ்சாபில் 19 கல்லூரிகள், ராஜஸ்தானில் 17 கல்லூரி கள் என மொத்தம் 17 மாநிலங்களில் கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில்…

தமிழ்நாட்டில் மட்டும் 45 கல்லூரிகள் இந்த 3 ஆண்டுகளில் மூடப் பட்டிருக்கின்றன. அதில் 2024-2025இல் 15 கல்லூரிகள், 2025-2026இல் 16 கல்லூரிகள், 2026-2027 (நடப்பாண்டு)-ல் 14 கல்லூரிகள் மூடப்பட்டுள் ளன.

ஏ.ஜி.சி.டி.இ. விதிகளின் படி, இந்த நிறுவனங்கள் படிப்படியாக மூடப்படுவ தால் ஏற்கெனவே படித்து வரும் மாண வர்களின் கல்வி பாதிக்கப் படாது. அவர்கள் தங்களது படிப்பை வெற்றிகரமாக முடிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் புதிய மாணவர் சேர்க்கை மட்டும் நிறுத்தப் படும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *