சென்னை. ஜூலை 28- முந்தைய திமுக ஆட்சியில் கடந்த 2025ஆம் ஆண்டு 7ஆவது மாநில நிதிக் குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக, ஓய்வுபெற்ற அய்ஏஎஸ் அதிகாரி அலாவுதீன் நியமிக்கப்பட்டார்.
இந்த குழு உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையை மதிப்பாய்வு செய்து, மாநில அரசிடம் பரிந்துரை அறிக்கையை ஆக.31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், அதற்கான காலக்கெடு டிச.31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசிதழிலும் இதற்கான அறிவிக்கை வெளி யிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் உள்ளாட்சி அமைப்பு களின் நிதி நிலையை ஆய்வு செய்து, விரிவான பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பிக்க நிதிக் குழுவுக்கு 4 மாதம் கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது.
