சென்னை, ஆக. 6- நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை சின்மயா நகரில் கடந்த 6 நாட்களாகத் தொடர் பட்டினிப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இப்போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்று வந்த ரவி என்பவருக்கு, இன்று அதிகாலை திடீரெனக் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உணவின்றித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஏற்பட்ட உடல் சோர்வு காரணமாக அவர் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு மேல் சிகிச்சைக்காகச் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், போராட்டக் காரர்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
‘நீட்’ தேர்வு ரத்து! 6ஆவது நாளாக தொடரும் பட்டினிப் போராட்டம்! போராட்டக்காரர் மருத்துவமனையில் அனுமதி!
Leave a Comment
