
திருச்சி, ஆக.6- 8ஆம் வகுப்பு மாணவி பிஎம்.சாத்விகா, 4ஆவது மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் 15 வயதிற்குட்பட்ட மாணவி கள் பங்கேற்ற பிரிவில் 4ஆம் இடம் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தார்.
11ஆம் வகுப்பு மாணவி எஸ்.ரோஷினி திருச்சி மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் தனிப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் மற்றும் சண்டைப் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தார்.
இம்மாணவிகளுக்கு பள்ளித் தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து மாணவிகளை ஊக்கப் படுத்தினர்.
