சிராவயல் மருதங்குடி ச.கைவல்யன் நினைவேந்தல்

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

காரைக்குடி ஆக. 5- காரைக்குடி மாவட்ட ப.க. நிர்வாகியும், மேனாள் கூட்டுறவுத்துறை இணை இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்று  அண்மையில் மறைந்த   காரைக்குடி அருகில் உள்ள சிராவயல் மருதங்குடி ச.கைவல்யனின் நினை வேந்தல் படத்திறப்பு நிகழ்வு அவரது இல்லத்தில் நடைபெற்றது.

காரைக்குடி மாவட்ட கழகக் காப்பாளர் சாமி.திராவிடமணி படத்தினை திறந்து வைத்தார். காரைக்குடி மாவட்ட தலைவர் கு.வைகறை, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா ஆகியோர் இரங்கலுரை வழங்கி வீர வணக்கம் செலுத்தினர். புகழேந்தி தங்கமணி எழுதிய இரங்கல் கவிதை வாசிக் கப்பட்டது.

மறைந்த ச.கைவல்யன் இணையர் கலாவதி, மகன்கள் அறிவழகன், அன்பழகன், மகள் மைவிழி மற்றும் அவர் தம் குடும்பத்தினர் அனை வரையும் வரவேற்றனர். ச.கைவல்யன் தனது இறுதி மூச்சு அடங்கும் வரை திராவிடர் கழகக் கொள்கைகளையும், கழகத் தலைவர் ஆசிரி யர் அவர்களின் தலைமை யையும் ஏற்று சிறப்பாக பணியாற்றியவர்.  புதுக் கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு  அவரது உடல் கொடையாக வழங் கப்பட்டது.

இவரது தந்தை யார் சங்கரன்  மலேசிய திராவிடர் கழகத்தில் இணைந்து பணியாற்றி யவராவார்.  தந்தை பெரியார் மலேசியா வந்திருந்த போது வரவேற்றவர்களில் இவரும் ஒருவர். 1930 களிலேயே தனது மூன்று பிள்ளைகளுக்கு ராமாமிர்தம், கைவல்யன், மலர்க்கொடி என பெயர் சூட்டியுள்ளார்.

இந்த மருதங்குடி கிராமத்தில் 06-04-1926 அன்று தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்கென தனியாக கிணறு வெட்டி  அதற்கு காந்தி கிணறு என பெயரிட்டும், அதை திறந்து வைக்க தந்தை பெரியாரை அழைத்ததும்,

அதற்கு நேரில் வந்த  தந்தை பெரியார் எல்லோரும் பொதுக் கிணற்றை பயன்படுத்த வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு. உங்களுக்கு தனியாக கிணறு அமைப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்று  அய்யா தந்தை பெரியார் மறுத்த பேசியதும் அம்மக்க ளிடையே விழிப்புணர்வை உண்டாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *