2040ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதர்கள் செல்வார்கள்: இஸ்ரோ தலைவர் இலக்கு

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

பெங்களூரு, ஆக. 4– 2035ஆம் ஆண்டு விண்வெளி நிலையம் அமைக்கப்படும், 2040இல் நிலவுக்கு மனிதர்கள் பயணம் செல் வார்கள் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார்.

இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையத்தை 2035ஆம் ஆண்டுக்குள் அமைப்பதற்கும், 2040ஆம் ஆண்டுக்குள் இந்திய ராக்கெட் மூலம் இந்தியரை நிலவுக்கு அனுப்புவதற்கும் இஸ்ரோ இலக்கு நிர்ணயித்து தீவிரமாக பணியாற்றி வருகிறது என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்  தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

இந்தியாவை வருகிற 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பு அவசியம். ஆராய்ச்சிகள் வெறும் கட்டுரைகளாக மட்டும் நின்றுவிடாமல், சமூகத்திற்கு பயன் தரும் தொழில்நுட்பங்களாகவும், காப்புரிமைகளாகவும், தயாரிப்பு களாகவும் மாற வேண்டும்.

இஸ்ரோவின் பங்களிப்புகளாக, தொலைதொடர்பு, வானிலை முன்னறிவிப்பு, பேரிடர் மேலாண்மை, விவசாயம், மீன்வளம், நீர் வளங்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட துறைகளுக்கு இஸ்ரோவின் செயற்கைக்கோள்கள் ஆதரவளித்து வருகிறது.

வழங்கப்படும் ஆலோசனைகள் மீனவர்களின் வருமானத்தை மேம் படுத்த உதவியுள்ளது. தொடக்கத்தில் பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், இந்தியா உள்நாட்டிலேயே ‘கிரையோ ஜெனிக்’ தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளது.

ஏவுதல் திறன்களுக்காக பன் னாட்டு அளவில் அங்கீகாரம் பெற்றுள் ளதையும் அவர் நினைவுகூர்ந்தார். ‘சந்திரயான்’ திட்டம் மற்றும் ஒரே பயணத்தில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது போன்றவை இஸ்ரோவின் முக்கிய மைல்கற்கள் ஆகும். மாணவர்களுக்கு கூட்டு ஆராய்ச்சி, பயிற்சிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கான அதிக வாய்ப்புகளை இஸ்ரோ வழங்கும்’ இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *