சென்னை, ஆக. 4- இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் ஜெ.எஸ். தாரதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஒன்றிய அரசு பல்கலைக்கழகமான இக்னோ, தொலைதூர கல்வி திட்டத்தின் வாயிலாக பல்வேறு பாடப்பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. 2026 ஜூலை பருவ சேர்க்கை, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தொலைதூர கல்விப் படிப்புகளில் சேர விரும்புவோர் https://ignouadmission.samarth.edu.in/ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஆக. 16ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
இக்னோ-வில் பிஏ, பிகாம், பிஎஸ்சி பட்டப் படிப்புகளில் சேரும் தகுதியுடைய எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் 50 சதவீதம் விலக்கு அளிக்கப்படுகிறது. மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிய சென்னை மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
