த.வெ.க. அரசை கண்டித்து தஞ்சையில் நடைபெற்ற எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்

6 Min Read

* மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்துக!
*விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்துச் செய்க!
*டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்திடுக!

தஞ்சாவூர், ஆக. 4- கருநாடக அரசு மேகதாதுவில் அணைக் கட்ட முயற்சிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், விவசாய பயிர்க் கடன் களை முற்றிலுமாக ரத்துசெய்ய வேண்டும், டெல்டா மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், தமிழ்நாடும், தமிழ்நாட்டின் விவசாயிகளும் பாதிக்கப்படும் இந்தப் பிரச்சனையில்நடவடிக்கை இன்றி பேசாமல் மெத்தனம் காட்டும் தமிழ்நாடு தவெக அரசை கண்டித்து, திமுக தலைவர் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்புக்கிணங்க தஞ்சாவூர் பனகல் கட்டடம் அருகில் 03.08.2026, இன்று காலை 10 மணி அளவில் திமுக இளைஞரணிச் செயலாளர் தமிழ்நாடு அரசின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று கண்டன உரையாற்றினார்.

திமுக முதன்மைச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வரவேற்புரை ஆற்றினார்.

திராவிடர் கழகம்

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் நாகை சட்டமன்ற உறுப்பினர் எம்.எச். ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தமும்அன்சாரி, எஸ்.டி.பி.அய். கட்சி மாநிலத் தலைவர் முபாரக், திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தேமுதிக மாவட்டச் செயலாளர் சிவனேசன் மற்றும் இந்திய குடியரசுக் கட்சி, மக்கள் நீதி மய்யம் விவசாயச் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பெருமக்கள் கண்டன உரையாற்றினர்

திமுக தஞ்சை மத்திய மாவட்டச் செயலாளர் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் நன்றியுரை ஆற்றினார்

ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவிப்பிற்கு இணங்க

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவிப்பிற்கு இணங்க திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமையில் கழகத் தோழர்கள் கொடியோடு கலந்து கொண்டனர்.

கழக. விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர் வீ.மோகன், கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில தொழிலாளர் அணிச் செயலாளர் மு.சேகர், மாநில தொழில்நுட்ப அணிச் செயலாளர் வி.சி.வில்வம், குடந்தை மாவட்டக் காப்பாளர் வை.இளங்கோவன், திருவாரூர் மாவட்டக் காப்பாளர் வீர.கோவிந்தராஜ், புதுக்கோட்டை மாவட்டக் காப்பாளர் ஆ.சுப்பையன் மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூர் பாண்டியன், தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், திருச்சி மாவட்டத் தலைவர் ஆரோக்கியராஜ், மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன்,

திருவாரூர் மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி, நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப் போலியன், மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன், அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம்.

குடந்தை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, அறந்தாங்கி மாவட்டத் தலைவர் நா.மாரிமுத்து, திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர்கள் அறிவுச்சுடர், திராவிடச் செல்வன், தஞ்சை மாநகரத் தலைவர் செ.தமிழ்செல்வன், மாநகரச் செயலாளர் இரா.வீரக்குமார், மாநகரத் துணைச் செயலாளர் இரா.இளவரசன்.

தஞ்சை மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் மலர்க்கொடி, தஞ்சை தெற்கு ஒன்றியச் செயலாளர் ராமலிங்கம், ஒரத்தநாடு வடக்கு ஒன்றியச் செயலாளர் அ.சுப்பிரமணியன், கழக சொற்பெழிவாளர் இரா.பெரியார் செல்வன்,

தஞ்சை நகர இளைஞரணி துணைச் செயலாளர் அ.பெரியார் செல்வம், புதிய பேருந்து நிலையம் பகுதி தலைவர் கலைச்செல்வன், புதிய பேருந்து நிலையம் பகுதி பொறுப்பாளர் வே.துரை. விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஏ.வி.என்.குணசேகரன். விடுதலை வாசகர் வட்டம் துணை செயலாளர் விஸ்வநாதன். புலவர் மோகன்தாஸ், பொறியாளர் பாலக்கிருட்டிணன், திருவையாறு ஒன்றியத் தலைவர். ச.கண்ணன் மாவட்ட வழக்குரைஞர் அணித் தலைவர், இரா.சரவணக்குமார் பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர், தங்க.வெற்றிவேந்தன் தஞ்சை தெற்கு ஒன்றிய தொழிலாளர் அணித் தலைவர், அழகு.ராமகிருஷ்ணன், மாநகர கலை இலக்கிய அணி அமைப்பாளர் பகுத்தறிவு தாசன், பன்னீர்செல்வம் விஏஓ ஓய்வு, அண்ணா நகர் பகுதிச் செயலாளர், இரா பரந்தாமன் கரந்தை பகுதிச் செயலாளர், ம.தனபால் தஞ்சை மாநகர துணை தலைவர், அ. டேவிட் மாநகர இளைஞரணி துணைச் செயலாளர். ரமேஷ் சீனிவாசபுரம்,

திருச்சி மாவட்டம் பொதுக்குழு உறுப்பினர் சங்கிலி முத்து, விஜயராகவன், திருவாரூர் மாவட்டத் துணைத் தலைவர் என்.ஜெயராமன் மாவட்ட விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர் க.வீரையன் க.சி.ராஜா குடவாசல் ஒன்றியச் செயலாளர் க.அசோக்ராஜ் பன்னீர்செல்வம், திருவாரூர் ஒன்றியத் தலைவர் கா.கவுதமன், திருவாரூர் ஒன்றியச் செயலாளர் பாஸ்கர், திருவாரூர் ஒன்றியத் துணைத் தலைவர் கு.இராஜேந்திரன், ஆலோசகர் ஜெ.கனகராஜ், கொரடாச்சேரி ஒன்றியத் தலைவர் சி.ஏகாம்பரம், கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் மு.சரவணன் வீரமணி,

அரியலூர் மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் இரத்தின.இராமச்சந்திரன், மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் மு. இராசா, மாவட்ட விவசாய அணித் தலைவர் மா. சங்கர், மாவட்ட விவசாய அணிச் செயலாளர் மாவட்ட இளைஞர் அணித் தலைவர் லெ.தமிழரசன் ஆ.இளவழகன், அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து, செந்துறை ஒன்றியத் தலைவர் மு.முத்தமிழ்செல்வன், செந்துறை ஒன்றியச் செயலாளர் இரா.செல்வகுமார், திருமானூர் ஒன்றியச் செயலாளர் பெ.கோபிநாதன், மாவட்ட தொழிலாளர் அணிச் செயலாளர் வெ.இளவரசன், பூ.கலைமணி, கே.எம்.அன்பரசன். சுப்புராயன்,

லால்குடி மாவட்ட இளைஞரணித் தலைவர் பனிமலர்ச்செல்வன், லால்குடி ஒன்றிய துணைத் தலைவர் சண்முகசுந்தரம், கீழவாளாடி கிளைத் தலைவர் தங்கதுரை கலைக்குழு மாவட்டத் தலைவர் பாச்சூர் அசோகன், சமூக காப்பு அணி அருள்மொழி, இளைஞர் அணித் தோழர்கள் தினேஷ், விஷால், வள்ளியப்பன், ஜானி, மவுலிஷ், நாக முத்து, கிஷோன், கிசான் பால் சிங், காட்சன், கிளமண்ட், ஃபோர்னெஷ், விஸ்வேஷ், குறிஞ்சி,

நாகை மாவட்ட மகளிரணி தலைவர் பு.அலமேலு, கும்பகோணம் மாவட்ட மகளிர் தலைவர் திரிபுரா சுந்தரி, பொதுக்குழு உறுப்பினர் சு.சு.விஜயகுமார், திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் எம்.என்.கணேசன், குடந்தை ஒன்றிய தலைவர் கோவி.மகாலிங்கம், எம்.என்.இராமலிங்கம் ந.குருமூர்த்தி, திராவிட பாலு ஆ.சிவானந்தம் மு.கார்த்திகேயன் மாரியம்மாள் தி.க மகளிரணி,

மன்னார்குடி மாவட்ட துணை செயலாளர் வீ.புட்பநாதன், தலைமை கழக பேச்சாளர் ராம. அன்பழகன், மன்னை ஒன்றிய தலைவர் தமிழ்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.அன்பழகன் பகுத்தறிவாளர் கழகம் கோ.வி.அழகிரி, நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் சதா.அய்யப்பன்,

மயிலாடுதுறை மாவட்ட துணைத் தலைவர் ஞான. வள்ளுவன், சீர்காழி ஒன்றிய தலைவர் சந்திரசேகரன் கொள்ளிடம் ஒன்றியத் தலைவர் பு.பாண்டுரங்கன், மயிலாடுதுறை நகரத் தலைவர் சீனி முத்து, பகுத்தறிவாளர் கழகம் அறிவழகன், மச்ச காந்தன், காரைக்கால் மாவட்ட செயலாளர் பொன்.பன்னீர்செல்வம்,  பட்டுக்கோட்டை மாவட்டம் பொதுக் குழு உறுப்பினர் முத்து.துரைராசு. மாவட்ட துணைச் செயலாளர் சோம.நீலக்கண்டன், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் க.வீரப்பன், திருமயம் ஒன்றியத் தலைவர் க. மாரியப்பன், மாவட்ட இளைஞரணித் தலைவர் காரல் மார்க்ஸ், அறந்தாங்கி மாவட்டம் பெரியார் வீர விளையாட்டு கழகம் கறம்பக்குடி முத்து,சவுந்தரராஜன், இளைஞரணி குமார்,

விருத்தாசலம் மாவட்ட துணைத் தலைவர் பன்னீர்செல்வம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை மன்னார்குடி, அறந்தாங்கி, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கும்பகோணம், இலால்குடி, திருச்சி, ஆகிய மாவட்ட பொறுப்பாளர்கள் கழகக் கொடியுடன் பங்கேற்று சிறப்பித்தனர். ஆகியோர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்

 

முன்னாள் அமைச்சர்கள் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம், சிவ.வீ.மெய்யநாதன் ஆர். வைத்தியலிங்கம், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், சா.சி..சிவசங்கர் மு.பெ.சாமிநாதன், ஆர்.ரகுபதி, கோவி.செழியன், உ.மதிவாணன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.எம்.அப்துல்லா. திருச்சி சிவா எஸ்.கல்யாணசுந்தரம், முரசொலி,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எஸ் எஸ் பழனி மாணிக்கம், திருவிடைமருதூர் ராமலிங்கம், ஏ.கே .எஸ்.விஜயன்,

சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டுக் கோட்டை அண்ணாதுரை பேராவூரணி அசோக்குமார், தென்காசி கலை கதிரவன் திமுக மாவட்டச் செயலாளர்கள் திருவாரூர் பூண்டி கே.கலைவாணன், மயிலாடுதுறை எம்.நிவேதா முருகன், தஞ்சை தெற்கு பழனிவேல்

நாகை.என்.கவுதமன், செல்லப் பாண்டியன், மாணவர் அணிச் செயலாளர் ஈரோடு வீரமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டி.கே.ஜி.நீலமேகம், எம் ராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, தஞ்சை மாநகராட்சி மேயர் (பொறுப்பு) டாக்டர் அஞ்சுகம் பூபதி, திமுக தஞ்சை மாநகரச் செயலாளர் சண். ராமநாதன் மற்றும் திராவிட முன்னேற்ற கழக அனைத்து நிலை மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *