மேகதாது அணை பிரச்சினை ‘கருநாடக அரசின் புதிய திட்ட அறிக்கை’ ஒன்றிய அரசுக்கு வரவில்லை

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

நாடாளுமன்றத்தில் அரசு பதில்

சென்னை, ஆக. 4– “மேகதாது அணை குறித்து கருநாடக அரசின் திருத்தப்பட்ட புதிய திட்ட அறிக்கை இதுவரை மத்திய நீர் ஆணையத்திற்கு வந்து சேரவில்லை” என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் நாடாளு மன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது.

மாநிலங்களவையில் மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன், “மேகதாது திட்டத்துக்காக திருத்தப் பட்ட திட்ட அறிக்கையை கரு நாடக அரசு சமர்ப்பித்துள்ளதா? இத்திட்டத்தால் தமிழ்நாட்டின் பாசன வசதி மற்றும் குடிநீர் தேவைகளுக்கு எந்தவொரு ஆய்வு பாதிப்பு ஏற்படுமா என ஆய்வு செய்யப்பட்டுள்ளதா?” என கேள்விகளை எழுப்பியிருந்திருந்தார்.

இக்கேள்விகளுக்கு ஒன்றிய ஜல் சக்தி துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன் சவத்ரி அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: கருநாடக அரசு 2019-ம் ஆண்டு சமர்ப்பித்த மேகதாது அணை மற்றும் குடிநீர்த் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை ஏற்ெகனவே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு மற்றும் ஒன்றிய நீர் ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு திருத்தப்பட்ட புதிய திட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்கமாறு கருநாடக அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. இதுவரை அத்தகைய திருத்தப்பட்ட புதிய திட்ட அறிக்கை எதுவும் ஒன்றிய நீர் ஆணையத்திற்கு வந்து சேரவில்லை. காவிரிப் படுகையில் அமையும் நீர் திட்டங்களுக்குத் திட்ட அறிக்கைகளை ஒனற்ிய நீர் ஆணையம் பரிசீலிக்கும் போது, ஒன்றிய நீர் ஆணையத்தின் நடைமுறை வழிகாட்டுதல்கள், காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் 2018 பிப்ரவரி 16 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே ஆய்வு மற்றும் மதிப்பீடு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல், மின்துறை தொடர்பாக மற்றுமொரு கேள்வியும் எழுப்பியிருந்தார். இக்கேள்விகளுக்கு ஒன்றிய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணை அமைச்சர் சிறீபத் நாயக் அளித்த பதில்: கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் உச்சக்கட்ட மின் தேவைகள் அனைத்தும் 100 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை 0 சதவீதமாக உள்ளது. தமிழ்நாட்டில் துணை நிலையங்களைப் புதுப்பிக்கவும், பேட்டரி சேமிப்பு அமைப்புகளை அமைக்கவும் ரூ.785.21 கோடி மானியத்தில் 10 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ரூ.9,235 கோடியும், மின் விநியோகக் கட்டமைப்பை சீரமைக்க ரூ.9,568 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கு இடையேயான மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் 8.38 கிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை இணைக்க திட்டம்மிடப்பட்டு, அதில் 2.38 கிகாவாட் திட்டங்கள் தமிழகத்தில் ஏற்ெகனவே செயல்பாட்டுக்கு வந்துள்ளன என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *