இரு சக்கர வாகனப் பரப்புரைக்கு அனுமதி மறுத்த காவல்துறையின் உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில்

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

ஒரு வார காலத்திற்குள் அரசு பதிலளிக்க வேண்டும்!
உயர்நீதிமன்றம் உத்தரவு

நீட், உயர் ஜாதியின ருக்கான பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு ஆகிய வற்றை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆறு முனைகளிலிருந்து திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை ஆகிய அமைப்புகளின் சார்பில் ஜூலை 30, 31, ஆகஸ்ட் 1, 2 நான்கு நாட்கள் இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அதற்குத் தமிழ்நாடு அரசின் காவல்துறை அனுமதி மறுத்தது. இந்த அனுமதி மறுப்பு உத்தரவை ரத்து செய்ய வேண்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சார்பில் நீதிப் பேராணை மனு (ரிட்) தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று (04.08.2026) காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஒரு வார காலத்திற்குள் அரசு தரப்பு பதிலளிக்குமாறு ஆணையிட்டு, வழக்கை அடுத்த செவ்வாய்க்கிழமைக்கு (11.08.2026) ஒத்தி வைத்தார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் சார்பில், மூத்த வழக்குரைஞர் ஜெ.ரவீந்திரன் வாதாடி னார். திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், செயலாளர் மு.சென்னியப்பன், கழக வழக்குரைஞர்கள் சு.குமாரதேவன், திருப்பூர் ஆ.பாண்டியன், துரை.அருண், தளபதி பாண்டியன், பா.மணியம்மை, பிரபாகரன், சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *