இந்தியாவில் கண் மருந்து தயாரிப்புகளைத் திரும்பப் பெறுகிறது சன் பார்மா

1 Min Read

மும்பை, ஆக.3 நாட்டின் முக்கிய கண் மருந்து தயாரிப்பு நிறுவனமாக இருப்பது சன் பார்மா. இது மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரில் உள்ள கோரேகானை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.இந்நிலையில், கலப்படம் மற்றும் நச்சுத்தன்மை குறித்த அச்சம் காரணமாக இந்தியாவில் பல கண் மருந்து (Eye Drop) தயாரிப்புகளைத் திரும்பப் பெறுவதாக சன் பார்மா நிறுவனம் அறிவித்துள் ளது.

இதுதொடர்பாக சன் பார்மா டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் லிமிடெட் நிறுவனம் கடந்த ஜூலை 17 அன்றுவிநியோகஸ்தர்களுக்கு அனுப்பிய ரகசியக் கடிதத்தில்,”நமது தயாரிப்பின் பல கண் மருந்துப் பொருட்களின்விநியோகத்தை நிறுத்திவைக்கிறோம். அதாவது டெப்போப்ரெட் 2மிலி; பிரிநோலார் (BKC இல்லாதது); பிரிஞ்சோடிம் 5மிலி (BKC இல்லாதது); லோடிப்ரெட் 5மிலி; லோடிப்ரெட்1%; லோடிப் ரெட் எல்எஸ் 0.2% 5மிலி; லோடிப் ரெட் டி; நேபலாக்ட் ஓடி 3மிலி; நேபலாக்ட்-இசட்; டோபா-எப்; நேபலாக்ட் 5 மிலி போன்ற கண் மருந்துகளை சந்தையில் இருப்பைத் திரும் பப் பெற முடிவு செய்துள்ளோம். இந்தத் தயாரிப்புகளுக்கு உடனடியாக பில்செய்வதை நிறுத்த வேண் டும். தற்போதைய இருப்பு குறித்த விவரங்களை விநியோகஸ்தர்கள் வழங்க வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

அதே சமயம் சன் பார்மா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “நோயாளிப் பாதுகாப்புக்கு எங்களின் மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நோயாளிகளின் நலனுக்காகவும், பொருந் தக்கூடிய ஒழுங்குமுறை தேவைகளுக்கு இணங்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துள்ளோம். நோயாளிகள் தொடர்ந்து இந்த சிகிச்சைப் பலன்களைப் பெறும் வகையில், இந்த தயாரிப்புகளின் இருப்பை மீண்டும் வழங்கு

வதற்காக எங்கள் குழுவினர் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்” என அவர் கூறினார்.சன் பார்மா இந்த அறிவிப்பு மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *