பெங்களூருவில் ‘பெரியார் உலக மயம்’ எழுச்சிமிகு கருத்தரங்கம்

3 Min Read

பெங்களூரு, ஆக. 3- பெங்களூர் சிவானந்தா சர்க்கில் அருகிலுள்ள காந்தி பவனில் உள் அரங்கில் பெரியார் உலக மயம் என்னும் தலைப்பில் நிகழ்ச்சி எழுச்சியுடன் 30.7.2026 அன்று நடைபெற்றது.

தந்தை பெரியார், காந்தி, லோகியா ஆகிய மூவரின் ஒளிப் படங்கள் பூக்கள் அணிவித்து மேடையின் வலது புறம் வைக் கப்பட்டிருந்தது.

பேராசிரியர் சித்தராமையா தாய்மொழியின் மேன்மையை குறித்து சான்றுகளுடன் விளக்கிக் கூறினார். ஒன்றிய அரசின் ஆதிக்கத்தால் பல லட்சம் செலவு செய்து செத்த மொழியாம் சமஸ்கிருதத்தையும் இலக்கண இலக்கியமில்லாத இந்தியையும் நாட்டில் வளர செய்திட முயற்சி செய்கின்றன. அது வெற்றி பெற இயலாது. அவரவர் தாய்மொழியில் நன்கு பயின்று மேன்மை அடைய வேண்டும். தந்தை பெரியார் பிறந்திராவிட்டால் நாட்டில் இவ்வளவு பெரிய அறிவியல் மாற்றம் ஏற்பட்டிருக்காது என பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிப் பேசினார்.

ஆர்.டி..பாட்டில் என்ற மூத்த காங்கிரஸ் பிரமுகர் அண்ணல் காந்தி, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்கம் கூறினார்.

அக்ரகார கிருட்டினமூர்த்தி சீரிய பகுத்தறிவாளர் சிறந்த எழுத்தாளரும், கவிஞருமானவர். சாகித்திய அகாடமியில் அங்கத்தினருமாவார். இவர் பெரியார் பெங்களூரு வருகை தந்தது முதல் பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, பெரியார், அம் பேத்கர், லோகியா பற்றி பல்வேறு இதழ்களில் கட்டுரைகளும், கவிதைகளும் எழுதி சுயமரியா தைக் கொள்கைகளை பரப்பி வருவதாக கூறினார். பணி நிறைவு பெற்ற டில்லி காவல் துறை ஜெனரல் கே.அரிகேஷ் சமுதாயத்தில் ஏற்ற தாழ்வு, உயர்வு தாழ்வுகளை நீக்க வேண்டும். இந்தியா ஒரு மதச்சார்பு அற்ற நாடு, ஜாதி, மத பேதங்களை ஒழிக்க பெரியார், அம்பேத்கர், லோகியா  ஆகியோர் அரும்பாடுபட்டு உள்ளனர் என கூறினார்.

மேனாள் அட்வகேட் ஜெனரல் இரவிவர்மக் குமார், தந்தை பெரியார் கருத்துகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு அமா வாசை அன்று இராகு காலத்தில் திருமணம் செய்து கொண்டு இன்று இணையருடன் சிறப்பாக எந்தவித பேதமும் இல்லாமல் வாழ்ந்து வருவதாகவும், பெரியார் கொள்கைகளை உலக மயமாக்க அரும் பாடுபடும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தனக்கு உற்ற நண்பர். அவரை அழைத்து சமூகநீதி மாநாடுகளை நடத்தியுள்ளதாகவும் பெரியாரே அனைவருக்கும் உற்ற அறிவியில் தலைவர் என்று நெடிய நேரம் பேசினார்.

பெரியார் பன்னாட்டு அமைப்பு தலைவரும் சிறந்த மருத்துவரும் அமெரிக்காவில் வாழ்ந்துவரும் கழகக் கொள்கைப் பரப்புனரான சோம இளங்கோவன் ஆங்கிலத்தில் உரையைத் தொடங்கி ஒரு மணி நேரம் சிறப்புரை நிகழ்த்தினார்.

பெரியார் இன்று ஆசிரியர் அவர்கள் தீவிர நன்முயற்சியால் சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மன், அமெரிக்கா, ஜப்பான் போன்ற  நாடுகளில் அறிவாசான் தந்தை பெரியார் கருத்துகளும், கொள்கைகளும் பரப்புரை மேற்கொள்ளப்பட்டு பெரியார் விழாக்களை அனைவரும் கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு மதத் தலைவர்கள் தங்களின் விளம்பர முயற்சிக்கு சமூக ஏற்றத்தாழ்வுகளை பரப்பி வருகின்றனர். பெரியார் ஒருவர் தான் ஏற்ற வாழ்வியலை, சமத்துவ சமுதாயம், நிறுவிட இறுதி மூச்சு அடங்கும் வரை அயராது பாடுபட்டார். கல்வி ஒரு சார்பு மக்களுக்கு என்பதை உடைத்து நொறுக்கியதன் விளைவுதான் அனைவரும் கல்வி பயின்று அறிவியல் மேம்பாட்டால் மதிநுட்பம் மிகுந்த பொறியாளர், மருத்துவர், விஞ்ஞானிகளாக உயர்ந்துள்ளனர் என்று பல்வேறு சான்றுகளும், வேறு யாராலும் முடியாதது நம்மால் முடியும் நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது என்னும் மேற்கோளினை கூறி நிறைவு செய்தார்.

நிகழ்வில் முன்னர் பேசிய அனைவரும் கன்னட மொழியில் பேசி சிறப்பித்தனர். கருநாடக மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சே.குணவேந்தன், துணைத் தலைவர் ஜெ.அருண், செயலாளர் இரா.முல்லைக்கோ, பொருளாளர் கு.செயகிருட்டினன், க.பாஸ்கர், வழக்குரைஞர் தி.நரசிம்மமூர்த்தி, கருநாடகத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் முத்து மணி நன்னன், அமெரிக்க மருத்துவர் சரோஜா இளங்கோவன், மகனார் சிவக்குமார் நாராயண கவுடா மற்றும் ஏராளமான அறிஞர்களும், எழுத்தாளர்களும், கழகத் தோழர்களும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *