கபினி அணையில் இருந்து நீர் திறப்பு 27 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயரும் வாய்ப்பு!

1 Min Read

மேட்டூர், ஆக. 3- கருநாடக காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளான தலைக்காவிரி, பாக மண்டலா, மடிகேரி மற்றும் வயநாடு உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, கருநாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித் துள்ளது.

முன்னதாக, தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால் கருநாடக அணைகளின் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது.

இதனால் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான தண்ணீரை தமிழ் நாட்டிற்குத் திறக்க கருநாடகா மறுத்து வந்தது. காவிரி ஒழுங்காற்றுக்குழு மற்றும் மேலாண்மை ஆணையம் நாள்தோறும் 3,500 கனஅடி நீர் திறக்க உத்தரவிட்ட நிலை யிலும் கருநாடக அரசு தண் ணீரைத் திறக்கவில்லை.

இந்நிலையில், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கருநாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் உத்தரவின்பேரில் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. முதலில் வினாடிக்கு 15,000 கன அடியாக இருந்த நீர்த்திறப்பு, பின்னர் 25,000 கன அடியாக உயர்த்தப்பட்டது.

தற்போது அணைக் கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், இன்று (3.8.2026) நீர்த்திறப்பு வினாடிக்கு 27,000 கன அடியாக மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

84 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் தற்போது 82.59 அடியாக உள்ளது.

கபினி அணையில் இருந்து அதிகளவில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வரும் நாட்களில் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *