காவிரி பிரச்சினையில் தமிழ்நாடு அரசுக்கு ஆதரவு அளிக்க அனைத்து கட்சிகளும் தயார்! மேனாள் அமைச்சர் ரகுபதி உறுதி

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 3- திமுக மேனாள் அமைச்சர் ரகுபதி நேற்று (2.8.2026) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டுக்கு விடுவிக்க உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் அவசர மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாடு எதிர்க்கட்சிகள் கருநாடகாவுக்கு ஆதரவாக செயல்படுவதுபோல சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கொச்சைப் படுத்தி பேசியுள்ளார். முதலமைச்சர் ஜோசப் விஜய், நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த் ஆகியோர் காவிரி, மேகதாது அணை தொடர்பாக இதுவரை வெளிப்படையாக எந்தக் கருத்தும் கூறவில்லை.
தமிழ்நாடு அரசியல் கட்சிகள் குறித்த அமைச்சர் நிர்மல் குமாரின் கருத்தையும், அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை எனும் அவரது நிலைப் பாட்டையும் அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனரா என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் உடனே அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமையை நிலைநாட்டும் வகையில் அரசு தீவிரமாக செயல்பட வேண்டும். காவிரி பிரச்சினையில் அரசுடன் ஒத்துழைக்கவும், ஆலோசனை கூறவும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தயாராகவே இருக்கின்றன என்று அவர் தெரிவித் துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *