மாணவர்கள் மீது தாக்குதல் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக ஏஅய்எஸ்ஏ வலியுறுத்தல்!

1 Min Read

புதுடில்லி, ஆக.3- டில்லியில் அண்மையில் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’யினர் நடத்திய போராட்டத்தின் போது, மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் டில்லி காவல் ஆணையர் ஆகியோரே முழு பொறுப்பேற்க வேண்டும் என்று அகில இந்திய மாணவர் சங்கத்தின்  தேசிய தலைவர் நேஹா போரா குற்றம் சாட்டியுள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியவதாவது:

“கடந்த ஜூலை 20ஆம் தேதி போராட்டம் நடத்திய அமைதியான மாணவர்கள் மீது பாதுகாப்பு படையினர் பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியது ஏன்? பாதுகாப்புப் படையினருக்கு இத்தகைய ஆயுதங்கள் வழங்கப்பட்டது யாருடைய உத்தரவின் பேரில்?”

“போராட்டக்காரர்களைக் காயப்படுத்தும் நோக்கில் ஆணிகள் பொருத்தப்பட்ட தடிகள் பயன் படுத்தப்பட்டது ஏன்?” “இந்தக் கொடூர நடவடிக்கைகள் மாஜிஸ்டிரேட் அல்லது உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி எடுக்கப்பட்டிருந்தாலும், அதற்கான இறுதி அரசியல் பொறுப்பு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையே சேரும். மாஜிஸ்டிரேட்டின் உத்தரவின் பேரில் இது நடந்திருந்தால், கட்டுப்பாடற்ற எத்தகைய உள்துறை அமைச்சராக அவர் செயல்படுகிறார்?”

“ஒருவேளை இது உள்துறை அமைச்சரின் நேரடி உத்தரவின்படி நடந்திருந்தால், சாதாரண பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகளால் சுடக்கூடிய எத்தகைய குற்றவியல் ஆட்சியை அவர் நடத்துகிறார்?” மாணவர்கள் மீதான இந்தத் தாக்குதலுக்கு முழு முதற்காரணமான ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக பதவியில் இருந்து விலகவேண்டும் என்றும், டில்லி காவல் ஆணையர் அனுராக் குமார் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் நேஹா போரா வலியுறுத்தினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *