நன்னன் குடி நடத்திய நூல் வெளியீட்டுடன் கூடிய பரிசளிப்பு விழா மேனாள் அமைச்சர் மா.சுப்பிரமணியம், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பங்கேற்பு-பரிசு வழங்கி சிறப்புரை

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 2– நன்னன் குடி நடத்திய நூல் வெளியீட்டுடன் கூடிய பரிசளிப்பு விழா-23இல் [காலம்-30.7.2026 மாலை 6 மணி] 1.இவர்தாம் பெரியார்(வரலாறு)-பெரியாரும் காங்கிரசும் 2.முரசில் நன்னனின் ஒலி 3.தன்மான வாழ்வே நல்வாழ்வு (சிறுகதைகள்) 4.என தருமை அம்மாச்சி ஆகிய நான்கு நூல்கள் வெளியிடப்பட்டன.

பள்ளி மாணவர்களுக்கான தமிழைத் தமிழாக்குவோம் தேர் வுகள் – பரிசுகள். பகுத்தறிவு, பிறமொழி கலவாத சிறுகதைப் போட்டி – பரிசுகள், திராவிடர் கழகம் தேர்ந்தெடுத்துக் கொடுத்த உயர்திணை வாழ்விணையர் அய்வருக்கு போற்றியும் பரிசும், திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார்.

மேனாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் பரிசுகள் வழங்கிச் சிறப்புரை வழங்கினார். புதுவை இளவரசி சங்கர் நூல் திறவுரை ஆற்றினார். நன்னன் குடி வேண்மாள் வரவேற்புரை வழங்கிட நன்னன் குடி அவ்வை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

இவ்விழாவுக்கு திராவிட நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துரை வழங்கி இருந்தார்கள். ஆசிரியர் கி.வீரமணி, வீ.அன்புராஜ், கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி இருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *