புதுடில்லி, ஆக.2 பெட்ரோல் பங்குகளில் இ20 (E20) மற்றும் சாதாரண பெட்ரோல் ஆகியவற்றில் தங்களுக்கு விருப்பமானதைத் தேர்வு செய்யும் உரிமையை நுகர்வோருக்கு வழங்கக் கோரி, வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தை நோக்கி பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
நுகர்வோர் உரிமை
டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர். பெட்ரோல் பங்குகளில் இ20 அல்லது சாதாரண பெட்ரோல் – இதில் எதைப் பயன்படுத்த வேண்டும் என்பதை வாடிக்கையாளர்களே தீர்மானிக்கும் வாய்ப்பை வழங்க வேண்டும்.
எத்தனால் கலக்கப்பட்ட இ20 பெட்ரோலுக்கு சாதாரண பெட்ரோலை விடக் குறைவான விலையை நிர்ணயிக்க வேண்டும். “இ20 பெட்ரோலால் வாகனங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது” என ஒன்றிய அரசு கூறும் ஆய்வுகளின் அறிக்கையைப் பொதுவெளியில் வெளிப்படையாக வெளியிட வேண்டும்.
“இந்த நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் 4-ஆம் தேதி சுமார் 100 பேருடன் பிரதமர் இல்லத்தை நோக்கி பேரணி நடத்த உள்ளோம்.”ஏன்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறீயுள்ளார்
இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எத்தனால் எதிர்ப்பு அமைப்பினர் கலந்துகொண்டு, இ20 பெட்ரோலைப் பயன்படுத்தியதால் தங்கள் வாகனங்களின் இன்ஜின்களில் ஏற்பட்ட கோளாறுகள் மற்றும் கவலைகள் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
