இடுக்கி, ஆகஸ்ட் 1 கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொழுபுழா தாலுகா அடூர் மலைப்பகுதியில் அதிகாலை 2 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பெண் ஒருவர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை காரணமாக திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. அரக்கோணத்தில் இருந்து 34 வீரர்கள் கொண்ட (NDRF) சிறப்புக் குழு வந்துள்ளது. துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் தலைமையில் மீட்புப் பணிகள் நடைபெறுகின்றன உள்ளூர் தீயணைப்புத் துறை மற்றும் பொதுமக்களும் இணைந்துள்ளனர் கோட்டயம், பத்தனம்திட்டா உள்பட 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா உட்பட 7 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் மலைப்பகுதிகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
