வல்லம், ஆக. 1- சென்னை, தொழில்நுட்பக் கல்வி இயக்கக நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியும் இணைந்து நடத்திய “மண்டல அளவிலான நாட்டு நல பணித்திட்ட அலுவலர் களுக்கான மதிப்பாய்வு கூட்டம்” 28.07.2026 அன்று 10.00 மணியள வில் துவங்கியது.
சென்னை, தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப் பாளர் முனைவர் டி.முரளிதரன் வரவேற்புரை ஆற்றினார் .
இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நாட்டு நலப்பணி திட்ட மண்டல இயக்குநரகத்தின் மண்டல இயக்குனர் முனைவர் சி.சாமுவேல் செல்லையா ஆய்வுக் கூட்டத்தினை துவக்கி வைத்து உரையாற்றினார்.
தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித்திட்ட அலகின் மாநில நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் பி.என்.குணாநிதி கருத்துரை வழங் கினார். முன்னதாக வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலி டெக்னிக் கல்லூரியின் முதல்வர் க.ப.வெள்ளியங்கிரி ஆய்வுக் கூட்டத்தை தலைமை ஏற்று உரையாற்றினார்.
துவக்க விழாவை அடுத்து நாட்டு நலப்பணித் திட்ட மண்டல இயக்குநரகத்தின் மண்டல இயக்குநர் முனைவர் சாமுவேல் செல்லையா “போதையில்லா தமிழ்நாடு” என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். மேலும் போதை இல்லா தமிழ்நாடு பற்றிய உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர். மை பாரத் இணைய வாசலில் (My Bharat Portal) எவ்வாறு உள்நுழைவது(Login) மற்றும் பெயரை பதிவு செய்வது எப்படி என்பது பற்றிய விளக்க உரையை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பி.மாதவன் எடுத்துரைத்தார்.
பின்பு பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ரெ.நடராஜன் மற்றும் பெ.மாதவன் ஆகியோர் ஆய்வு கூட்டத்தை ஒருங்கிணைத்தனர். கூட்டத்தின் இறுதியில் இக்கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியை ஞா.செங்கொடி நன்றியுரை வழங்க ஆய்வு கூட்டம் இனிதே நிறைவுற்றது.
