கபிஸ்தலம், ஜூலை 31– கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், கபிஸ்தலம் மணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி பழைய வளாகத்தில் 25.07.2026 அன்று மாலை 6:30 மணிக்கு சிந்தனை களம்-14 நடை பெற்றது.
நிகழ்வுக்கு பாபநாசம் பட்டுக் கோட்டை அழகிரி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, முதல்வர் சே.தீபக் தலைமையேற்றார்.
கும்பகோணம் கழக மாவட்ட மகளிர் அணி தலைவர் என்.திரிபுரசுந்தரி அனைவரையும் வரவேற்று பேசினார். பாபநாசம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் மு.சேகர், பாபநாசம் ஒன்றிய கழக செயலாளர் சு.கலிய மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். பாபநாசம் பெரியார் பெருந் தொண்டர் சு.கணேசன் அவர்கள் தொடக்க உரையாற்றினார்.
தான் திராவிடர் கழகத்தில் ஈடுபட்டது எப்படி, அன்றைய 1950களில் சமுதாயத்தின் நிலை எப்படி இருந்தது, கழகத்தில் எப்படி முனைப்புடன் பணியாற்றினேன் என்பதைக் கூறி, அப்போது நடை பெற்ற போராட்டங்கள் மற்றும் போர்ப்படைத் தலைவர்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.
“ஞாபகம் வருதே ஞாபகம் வருதே” என்ற தலைப்பில் மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் வழக்குரைஞர் பி.ரமேஷ் கும்பகோணம், பாபநாசம் பகுதிகளில் அந்த காலத்தில் நடைபெற்ற மனித உரிமை ஒடுக்குமுறைகள், கும்பகோணம் நகராட்சியின் தீர்மானம் பற்றி எடுத்துரைத்தார். தந்தை பெரியாரது போராட்டங்களையும், அவருடைய அணுகுமுறைகளையும் மிக எளிமையாக எடுத்துரைத்தார். குடந்தை கல்லூரியில் நடைபெற்ற மாணவரிடையேயான வேறுபாடுகள் எப்படி, யாரால் களையப்பட்டது என்பதையும் ஞாபகப்படுத்தினார்.
கணேசன் அவர்களுக்கு மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத் தலைவர் லயன். வேலு. துரைசாமி, பாரத ஸ்டேட் வங்கி அலுவலர் ஆறுமுகம் ஆகியோர் பொன்னாடை அணிவித்தனர். ஒன்றிய பக தலைவர் மு.சேகர் நூலினை வழங்கினார்.
சிறப்புரை ஆற்றிய வழக்குரைஞர் ரமேஷ் அவர்களுக்கு ஒன்றிய கழக செயலாளர் சு.கலியமூர்த்தி, பயனாடையும், தாராசுரம் வை.இளங்கோவன் நூலினை வழங்கினார்.
பார்வையாளர்களுக்கு நூல் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மாணவி ஜே.பி. பிரதிக்ஷா கலிய பெருமாள், மாணிக்கத்திற்கு நாச்சியார் கோயில் வெங்கடேசன், ஆசிரியை புனிதாவிற்கு துரையரசன், குமாருக்கு ஒன்றிய கழகத் தலைவர் தங்க.பூவானந்தம், சுந்தர பெருமாள் கோவிலில் பிரேம்குமாருக்கு லயன் பெ.குணசேகரன், சுந்தர பெருமாள் கோயில் பிரபுவுக்கு லண்டன் குணா, ஆசிரியை சண்முகப்பிரியாவுக்கு கபிஸ்தலம் இளவரசன் நூல் வழங்கி சிறப்பித்தார்கள்.
முன்னதாக பெரியார் பெருந்தொண்டர் சு.கணேசன், வழக்குரைஞர் பி.ரமேஷ் ஆகி யோரை மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் அவைக்கு அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.
நிகழ்வுகளை கோவி. பெரியார் கண்ணன் ஒருங்கிணைத்தார்
இறுதியில் உம்பளாபாடி திமுக பொறுப்பாளரும், சீரிய பகுத்தறிவா ளருமான சா.கிருபாகரன் நன்றி யினை கூறி நிகழ்வை நிறைவு செய்தார்.
