நீட் எதிர்ப்பு இரு சக்கர வாகன பரப்புரைப் பயணம் ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தென்காசியிலிருந்து மாவட்டச் செயலாளர் கை.சண்முகம், மதுரை போட்டோ இராதா, சீ.தேவராசபாண்டியன் , அருப்புக்கோட்டை அழகர், இராசேந்திரன், ஆறுமுகம், மணிமாறன், விளாத்திகுளம் நாகராஜ் ஆகியோர் ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது, எதிரே மகிழ்வுந்தில் வந்துகொண்டிருந்த கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி.மு.இராசேந்திரன் இறங்கி வந்து பரப்புரை ஒத்தி வைக்கப்பட்ட செய்தியினை கேட்டு வருந்தினார். தமிழர் தலைவர் ஆசிரியர் என் மீது மிகுந்த அன்புகொண்டவர் அவர் எடுக்கும் எந்தப் போராட்டமும் வெற்றி பெறும். சென்று வாருங்கள் என வழியனுப்பி வைத்தார். (30.7.2026).
