தென்காசி, ஜூலை 31- தென்காசியில் நேற்று (30.7.2026) தொடங்கவிருந்த நீட்எதிர்ப்பு இரு சக்கர வாகனப் பரப்புரைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் தேவ.நர்மதா ஆகியோருக்கு, திராவிடர் இயக்கத்தின் அடிநாதம், சட்டப்பேரவை மேனாள் தலைவர், திருநெல்வேலிமேற்கு மாவட்ட திமுக செயலாளர் இரா.ஆவுடையப்பன் பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து பயனாடை போர்த்தி சிறப்பித்தார்.
ஆசிரியர் அவர்கள் தங்களைப் போன்ற தளபதிகளை தயார் செய்து வைத்துள்ளார், 93 வயதில் அவர்கள் ஓய்வின்றி விடுதலையில் எழுதுவதும், கூட்டங்களில் பேசுவதும் வியப்பாகவுள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மாவட்ட திராவிடர் கழக செயலாளர் இரா.வேல்முருகனுடன் நன்றி கூறி விடைபெற்றனர். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் (29.7.2026).
