தமிழ் – தமிழர் – தமிழ்நாட்டு உரிமைக்கு திராவிட இயக்கமும் – பொதுவுடைமை இயக்கமும் கைகோத்து நிற்கும் : உதயநிதி ஸ்டாலின்

3 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஜூலை 31- “தமிழ் – தமிழர் – தமிழ்நாட்டு உரிமைக்கு எதிராக என்ன நடந்தாலும், திராவிட இயக்கமும் ––- பொதுவுடைமை இயக்கமும் என்றைக்கும் ஓரணியில் கைகோத்துக் களத்தில் நிற்கும்.” என்று திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலை வருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, பழைய வண்ணையில், ‘உதவும் கைகள்’ அறக்கட்டளை மற்றும் திணை நிலவாசிகள் ஒருங்கிணைத்த தகைசால் தமிழர் தோழர் இரா.நல்லகண்ணு சிலை திறப்பு விழா மற்றும் ‘அம்மாச்சி கற்பனை யின் முதல் ஆசிரியர்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலை வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நல்லகண்ணு சிலையைத் திறந்து வைத்து நூலையும் வெளியிட்டார்.

தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “இன்று, தோழர் நல்லகண்ணுவுக்கு முதன் முதலாக எழுப்பப்பட்டுள்ள சிலையை உங்களுடன் சேர்ந்து திறந்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பை எனக்குத் தந்திருக்கும் உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கு மக்களுக்கான களப் போராளிகளைக் கொண் டாடுவதைவிட இன்ஸ்டா கிராமில் ரீல்ஸ் எடுக்கும் போராளிகளைத்தான் இந்தச் சமூதாயம் அதிகமாகக் கொண் டாடிக்கொண்டு இருக்கிறது.

“போராடினால் எதுவும் கிடைக்கும்” என்று உறுதியாக நம்பியவர் நல்லகண்ணு. அதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம் அண்மையில் டில்லியில் நடந்த போராட்டம். டில்லியில் நடந்த போராட்டத்தையொட்டி, இந்தியா முழுவதும் இளை ஞர்கள் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆனால், நீட் எதிர்ப்புப் போராட்டம் என்பது, தமிழ்நாட்டுக்குப் புதிது கிடையாது. என்றைக்கு நீட் முதன்முதலாக வந்ததோ, அன்றிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் அதை எதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறது.

டில்லியில் நீட் குளறுபடிக்கு எதிராக நடந்த மாணவர்கள் போராட்டம் முடிந்துவிட்டது என்று நான் நினைக்கவில்லை. இனிமேல்தான் அந்தப் போராட் டம் ஆரம்பிக்கப் போகிறது என்பதுதான் என் எண்ணம். நீட்டை முற்றிலும் ஒழிப்பதற்கான தொடக்கமாகத்தான், நான் அந்தப் போராட்டத்தைப் பார்க்கிறேன். நல்லகண்ணு இன்று இருந்திருந்தால், அவரும் இதைத் தான் நிச்சயம் சொல்லியிருப்பார். அவர் எந்த அளவுக்கு எளிமைக்குச் சொந்தக்காரரோ, அதே அளவுக்குப் போராட்டக் குணத்துக்கும் சொந்தக்காரர். அப்படிப்பட்டவரின் சிலையைத் திறந்துவைப்பதை என்னுடைய வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன்.

இந்த நிகழ்ச்சிக்கு நான் வருகிறேன், தோழர் வீரபாண்டி யனும் வருகிறார் என்பதால், பல்வேறு இடங்களில் இருந்து தொலைபேசி அழைப்புகள், விசாரிப்புகள் வந்ததாகச் சொன்னார்கள். ‘நிறைய பேர் போன் செய்து கேட்டார்கள். “நாளைய நிகழ்ச்சியில் குதிரை பேரம் நடத்துகிறீர்களா?” என்று கேட்டதாகச் சொன்னார்கள். உண்மையாகவே குதிரை பேரம் எங்கு நடக்கிறது என்று என்னைவிட உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

தோழர் வீரபாண்டியன் இங்கு வந்தவுடன் என்னுடன் பேசிக்கொண்டு இருந்தார். உங்கள் தந்தையார் எப்படி இருக்கிறார் என்று கேட்டார். எப்போதும்போல அதே தோழமை உணர்வோடுதான் அவர் இங்கே அமர்ந்துள்ளார் என்று நம்புகிறேன். ஏனெனில், தமிழ் – தமிழர் – தமிழ்நாட்டு உரிமைக்கு எதிராக என்ன நடந்தாலும், திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் என்றைக்கும் ஓரணியில் கைகோர்த்துக் களத்தில் நிற்கும்.

கலைஞர் அடிக்கடி பெருமை யாகக் குறிப்பிடு வார். “நான் மட்டும் பெரி யாரைச் சந்திக்காமல் இருந்திருந்தால், நிச்சயம் கம்யூனிஸ்ட் காரனாகத் தான் இருந்திருப்பேன்” என்று சொல்வார். அந்த அளவுக்கு கம்யூனிஸ்ட்டுகள் மேல் அவருக்கு தனிப் பாசம் உண்டு.

ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, கம்யூனிஸ்ட்டுகள் சொல்லும் கருத்துகளைக் கேட்டு, அதை நடைமுறைப்படுத்தியவர்தான் கலைஞர். அவர் வழியில், கம்யூனிஸ்ட்டுகள் மீது திமுக தலைவரும் தனி மரியாதை வைத்திருந்தார். அய்யா நல்லகண்ணுவுக்கு தமிழ்நாடு அரசின் மிக உயரிய விருதான தகைசால் தமிழர் விருதையும் வழங்கி பெருமைப்படுத்தியவர்” இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *