கடவுள் சக்தி இவ்வளவுதான்! துலாபாரம்: கேரளத்தில் நேர்த்திக்கடன் செலுத்திய பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு நடந்த விபரீதம்!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

திருவனந்தபுரம், ஜூலை 31 கேரளத்தில், துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்துகையில் தராசு உடைந்ததால் பாஜக சட்டமன்ற உறுப்பினர் முரளிதரன் காயமடைந் துள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள பவுர்ணமிக்காவு கோயிலில், 29.7.2026 அன்று இரவு கேரள பாஜக மூத்த தலைவரும், கழுக்கூட்டம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வி. முரளிதரன் துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, தராசில் தனது எடைக்கு நிகராக வாழைப்பழங்களைக் காணிக்கையாக அளித்து அவர் நேர்த்திக்கடன் செலுத்தும்போது தராசின் கயிறு அறுந்து அவர் கீழே விழுந்தார்.

இந்த நிகழ்வில் முரளிதரனின் கால்களில் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சடங்குகள் நிறுத்தப்பட்டு, உடனடியாக அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையின் மூலம் அவருக்கு எலும்பு முறிவு ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டது. இதனால், காயங்களுக்கு சிகிச்சை பெற்ற பின்பு முரளிதரன் வீடு திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தால் அங்கு மிகவும் பரபரப்பான சூழல் நிலவியது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *