மு.க. ஸ்டாலின் பெயர் பொறித்த கல்வெட்டு தொடர்பான வழக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

1 Min Read

சென்னை, ஜூலை 30 மேனாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயா் பொறித்த கல்வெட்டை மறைத்து மூடப்பட்டிருந்த வலையைச் சேதப்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தாக்கல் செய்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையை அடுத்த நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் இத்திட்டத்தின் இரண்டாவது பெரிய அலகு கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில் மேனாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதற்கான கல்வெட்டில் அவரது பெயா் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த ஜூலை 6-ஆம் தேதி, முதலமைச்சர் ஜோசப் விஜய், இந்தத் திட்டத்தைப் பார்வையிட்டார். அப்போது, பராமரிப்புப் பணி நடப்பதாகக் கூறி, ஸ்டாலின் பெயா் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டு வலையால் மூடப்பட்டிருந்தது. இது குறித்து கேள்வி எழுப்பிய திருப்போரூா் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எல்.இதயவா்மன், வலையைச் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பொதுச் சொத்தைச் சேதப்படுத்தியதாக, திருப்போரூா் தொகுதி திமுக மேனாள் சட்டமன்ற உறுப்பினர் எல்.இதயவா்மன் உள்ளிட்ட இருவா் மீது மாமல்லபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, இதயவா்மன் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசியல் காழ்ப் புணா்ச்சி காரணமாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் 29.7.2026 அன்று  விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல் துறை தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, இந்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசார ணையை ஆக. 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *