புதிய பாடப் புத்தகங்கள் உலகத் தரத்தில் இருக்கும்! தமிழ்நாடு பாடத்திட்ட வடிவமைப்புக் குழுத் தலைவர் உறுதி

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுக்கோட்டை, ஆக. 17- தமிழ்நாட்டின் புதிய பாடப் புத்தகங்கள் உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கும் என இஸ்ரோ மேனாள் தலைவரும், தமிழ்நாடு புதிய பாடத்திட்ட வடிவமைப்புக் குழுத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் நேற்று (16.8.2026) செய்தி யாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:

தமிழ்நாட்டின் புதிய பாடத்திட்டத்தில், முதல் 3 வகுப்புகளுக்கான முதலாம் பருவப் புத்தகங்கள் சிறப்பாக வெளிவந்துள்ளன. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலுமே எழுத, வாசிக்க, பேச, அடிப்படை கணிதத்தை எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில் புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதற்கு ஏற்ப ஆசிரியர் களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

வகுப்பறைகள் கரும்பலகையை தாண்டி, ஸ்மார்ட் வகுப்பறைகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன. ஆகையால், குழந்தைகள் விளையாட்டாகவே கற்றுக்கொள்ள முடியும். புத்தகத்தில் உள்ள பாடங்களை ஸ்மார்ட்போர்டு மூலம் கதையாக, ஓவியமாக, உரையாடல்கள் வழியாக எளிதில் கற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. தற்போது இது முதல் 3 வகுப்புகளுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அடுத் தடுத்த வகுப்புகளுக்குரிய புதிய புத்தகங்களுக்கான வரையறைகளை விரைவில் வெளியிட உள்ளோம். அதில் இருந்து பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் புத்த கங்கள் உருவாக்கப்படும். பன்னாட்டு அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகளையும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையிலான சூழலை உருவாக்க உள்ளோம்.

எனவே, புத்தகங்களை எளிமைப்படுத்திக் கொடுப்பது மற்றும் வகுப் பறைகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் பணிகளை எளிமையாக்குவது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.

தமிழ்நாடு புதிய பாடப் புத்தகங்கள் உலகத்தரம் வாய்ந்த அளவில் இருக்கப் போகின்றன. பன்னாட்டு அளவிலான, அடுத்த தலைமுறைக்கு தேவையானவற்றைப் புத்தகங்களில் கொடுக்கப் போகிறோம். கற்றலை இனிமையாக்க முயற்சி செய்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *