சென்னை, ஜூலை 30 ‘நீட்’ தேர்வை எதிர்த்தும், EWS பிரிவினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு என்னும் சமூக அநீதியை எதிர்த்தும், திராவிடர் கழகம், தமிழ்நாடு முழுவதும் நடத்தவிருந்த இருசக்கர வாகனப் பேரணிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது!
பெரியார் – அம்பேத்கரைக் கொள்கைத் தலைவர்கள் என்று தாங்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், நீட் தேர்வைத் தங்கள் கட்சி எதிர்ப்பதாகவும் கூறும், தவெகவின் ஆட்சியில் வெளிப்பட்டுள்ள இந்த சர்வாதிகாரப் போக்கு மிகுந்த கண்டனத்திற்குரியது!
ஆசிரியர் தன் அறிக்கையில் கூறியுள்ளபடி, சமூக நீதியில் கை வைப்பதும், சமூக விரோதச் செயலே ஆகும்!
கடந்த 17ஆம் தேதியே அனுமதி கேட்டுக் கடிதம் அனுப்பியிருந்தும், இன்று (30.7.2026) காலை சட்டென்று அப்பேரணிக்குத் தடை விதிப்பது எவ்விதத்திலும் ஜனநாயகம் ஆகாது!
தமிழ்நாட்டில் நடப்பது தவெக ஆட்சியா அல்லது பாஜக ஆட்சியா?
–இவ்வாறு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தனது கண்டன அறிக்கையில் தெரிவித் துள்ளார்.
