கடலூரில் ஆகஸ்ட் 30 அன்று “எதிர்நீச்சலில் வென்ற பெரியார்- திறந்தவெளி மாநாடு”! கடலூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்ட முடிவு!

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

கடலூர், ஜூலை 30– கடலூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 29.7.2026 அன்று இரவு 7 மணி முதல் எட்டு முப்பது மணி வரை கடலூர் புதுப்பாளையம் அய்.க்யூ. ஸ்டடி சென்ட்ரலில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டக் கழகக் காப்பாளர் அரங்க பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

மாவட்ட தலைவர் சொ. தண்டபாணி வரவேற்புரை ஆற்றினார். சுயமரியாதை வீரர் மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் இள. புகழேந்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மாநாடு சிறப்பாக நடத்திட அனைத்து உதவிகளையும் செய்வதாக குறிப்பிட்டார். மற்றும் மாவட்ட கழகச் செயலாளர் எழில் ஏந்தி மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இரா.பெரியார்செல்வம், கடலூர் மாநகர கழகத் தலைவர் தென் சிவகுமார், செயலாளர் சின்னதுரை, வழக்குரைஞர் பகுத்தறிவாளர் கழகத்தைச் சார்ந்த வனராசு, மாவட்ட மாணவர் அணி தலைவர் சிவபாண்டியன், செயலாளர் லாலு பிரசாத், அமைப்பாளர் தமிழ்மாறன், பண்ருட்டி ஒன்றிய தலைவர் கந்தசாமி, நா.அழகிரி, சி.என்.பாளையம், கழக நிர்வாகிகள் சுகுமாரன் எழிலரசன் லோகநாதன், குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக அமைப்பாளர் சேகர், வடலூர் தீன மோகன், திராவிட மணி நூலகர் இரா.கண்ணன், வடலூர் கழக அமைப்பாளர் முருகன், மணக்குப்பம் தருமன் முதலான தோழர்கள் கருத்துரை ஆற்றினர்.

தமிழர் தலைவரின் எதிர்நீச்சலில் வென்ற பெரியார் திறந்தவெளி மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனைகளை தோழர்கள் பரிமாறிக் கொண்டனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: வெகு மக்களுக்கு எதிரான கிராமப்புற ஏழை எளிய மக்களின் மருத்துவ கனவை சிதைக்கக் கூடிய நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர் ஜாதிக்காரர்களுக்கு 10% இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தி கழக மாணவர் அணி, இளைஞரணி, மகளிர் அணி, மகளிர் பாசறை சார்பில் நடைபெற இருக்கும் இருசக்கர வாகன பரப்புரை பயண கூட்டங்களை வரவேற்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்வது என்றும், ஆகஸ்ட் 30 அன்று கடலூரில் எதிர்நீச்சலில் வென்ற பெரியார் திறந்த வெளி மாநாடு மிகவும் சிறப்பாக நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

திராவிடர் கழகம்

மாவட்டக் கழக
மாணவர் கழக நிர்வாகிகள்

கடலூர் மாவட்ட கழக மாணவர் கழகத் தலைவராக நா. சிவபாண்டியன், செயலாளராக லாலு பிரசாத், அமைப்பாளராக தமிழ் மாறன், துணைத் தலைவராக திராவிடன் ஆகியோரை மாவட்டத் தலைவர் நியமனம் செய்தார்.
முடிவில் நூலகர் கண்ணன் நன்றி கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *