சிதம்பரம், ஜூலை 29- சிதம்பரம் மாவட்ட ப.க. சார்பில் 18-07-2026இல், சேத்தியாத்தோப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை நூல் அறிமுக விழாக் கூட்டம் நடராசா திருமணக் கூடத்தில் நடைபெற்றது. மாவட்ட கழக தலைவர் கோ.நெடுமாறன் தலைமையில், மாவட்ட செயலாளர் அ.செங்குட்டுவன் வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்ட கழகச் செயலாளர் கோவி.பெரியார்தாசன், அன்புசித்தார்த்தன், இராஜசேகரன், பேராசிரியர் ப.கலைச்செல்வன் ப.க, க.கதிரவன் ப.க ஆகியோர் முன்னிலையில் நெய்வேலி அருணாசலம் தொடக்க உரையாற்றினார். கோவை க.வீரமணி நூலை அறிமுகம் செய்து ஆய்வுரை ஆற்றினார். நூல்கள் விற்பனை நடந்தது.
ஏராளமான ப.க.வினரும், கழகத் தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
