வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் பின்வரும் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான விளையாட்டு வீரர்கள் இருபாலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விபரம் வருமாறு: பணி: சுருக்கெழுத்தாளர் (Grade – II) காலியிடம்: 1

தகுதி: +2 தேர்ச்சி மற்றும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் மற்றும் 50 வார்த்தைகள் என்ற வேகத்தில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ.25,500 – ரூ.81,100

வயது வரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Tax Assistant காலியிடங்கள்: 7

ஊதியம்: மாதம் ரூ.25,500 – ரூ81,100

தகுதி: ஏதாவதொரு பிரிவில் பட்டப்படிப்புடன் ஆங்கிலத்தில் 1 மணி நேரத்தில் 8000 எழுத்துகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Multi Tasking Staff காலியிடங்கள்: 4

ஊதியம்: மாதம் ரூ.18,000 -ரூ.56,900

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் விளையாட்டு சாதனைகள், உடற்தகுதி, மருத்துவத்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். 31.3.2026 தேதிக்கு முந்தைய விளையாட்டு சாதனைகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். மருத்துவ தகுதித் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் நேர்முகத் தேர்வு மற்றும் விளையாட்டுத் திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இது குறித்த விவரம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விளையாட்டுத் தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகள் ஏதாவதொன்றில் தேசிய, மாநில, பல்கலைக்கழக அளவில் விளையாடி குறைந்தது 3-ஆவது இடம் பெற்றிருக்க வேண்டும். காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுகள் விபரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் மேற்கண்ட பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பதவிறக்கம் செய்து, நிறைவு செய்து அதனுடன் தகுதி, விளையாட்டுத் தகுதி போன்ற சான்றிதழ்களின் நகல்களை இணைத்து Deputy Commissioner of Income Tax, Ist Floor, Aayakar Bhawan, Rajaswa Vihar, Bhubaneswar, Pin-751 007 என்ற அஞ்சல் முகவரிக்கு முன் பதிவு, விரைவு தபாலில் அனுப்ப வேண்டும்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்துசேர கடைசி நாள்: 31.7.2026

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *