31ஆம் தேதி முதல் தமிழ்நாடு, புதுச்சேரியில் பிராய்லர் கோழி விற்பனை நிறுத்தம்! கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

தஞ்சாவூர், ஜூலை 28- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஜூலை 31 முதல் பிராய் லர் கோழி விற்பனை நிறுத்தப்படும் என்றும் 60,000 கடைகளில் பிராய்லர் கோழி விற்கப்படாது என்றும் கோழி வணிகர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதனால், இரு மாநிலங்களிலும் கோழிக்கறி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக வணிகர்கள் தெரிவித் துள்ளனர்.

இந்த அறிவிப்பு தொடர்பாக தஞ்சா வூரில் தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பின் மாநில அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கோழி வணிகர்கள் பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.

வழிகாட்டு நெறிமுறைகள்

கூட்டத்தில், பிராய்லர் கோழிகளுக் கான தீவனக் கட்டுப்பாடு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அனைத்து மண்டல மற்றும் மாவட்ட கால் நடைத்துறை அதிகாரி களுக்கும் தெளிவாக அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும், விற்பனைக் காக அனுப்பப்படும் கறிக்கோழிகளுக்கு குறைந்தது 15 மணி நேரத்திற்கு முன்பே தீவனம் வழங்குவதை நிறுத்த வேண்டும். அப்படி தீவனங்களை வழங்கினால், கோழியின் இறைப்பையில் 100 கிராம் முதல் 200 கிராம் வரை தீவனமும் தண்ணீரும் தங்கிவிடும்.

கோழி வாங்கும் போது, சுமார் 150 கிராம் வரை செரிக்காத தீவனமாக இருக்கும். இதனால் வாடிக்கையாளருக்கு பண இழப்பு ஏற்படும் என்பது வணிகர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

அதேபோல் கோழியை வெட்டி சுத்தம் செய்யும் போது, இறைப்பையில் உள்ள செரிக்காத தீவனமும் அதோடு சேர்ந்த கழிவுகளும் கறியில் சிந்தி இறைச்சியைப் பாழாக்கிவிடுவதாக வணிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதன் காரணமாக சுத்தமான இறைச்சியை வழங்க முடியாத நிலை ஏற்படும் என்றும் வணிகர்கள் கவலை தெரி விக்கிறார்கள்.

வேலை நிறுத்தம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 31ஆம் தேதி முதல் பிராய்லர் கோழி விற்பனை நிறுத்தப்படுவதாக விற்பனையாளர்கள் அறிவித்துள்ளனர். மேலும், அன்றைய நாள் முதல் கோழி வணி கர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *