தஞ்சையில் நடைப் பயிற்சியின் போது வாக்கு சேகரித்தார் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின்

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

அரசியல், தமிழ்நாடு
தஞ்சை, மார்ச் 24- மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (23.3.2024) காலை தஞ்சையில் நடைப்பயிற்சியின் போது வாக்கு சேகரிப் பில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் முதலமைச்சருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். மக்களவைத் தேர்தலை யொட்டி தி.மு.க. மற்றும் அதன் கூட் டணிக் கட்சி கள் சார்பில் போட்டியிடும் வேட்பா ளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி யில் 22.3.2024 அன்று பிரச்சாரத்தை தொடங்கினார்.
திருச்சி அருகே சிறுகனூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் திருச்சி வேட் பாளர் துரை வைகோ, பெரம்பலூர் வேட்பாளர் அருண் நேருவை அறிமு கம் செய்து வைத்தார். தொடர்ந்து, தஞ்சாவூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி,நாகப்பட்டினம் வேட்பாளர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த செல்வராஜ் ஆகிய இருவருக்கும் வாக்கு கேட்டு கேட்டு, நேற்று (23.3.2024) மாலை திருவாரூர் மாவட்டம் கொர டாச்சேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இதற்காக தஞ்சாவூர் வந்த மு.க.ஸ்டா லின் தனியார் தங்கும் விடுதியில் ஓய்வெடுத்தார் தொடர்ந்து நேற்று காலை அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில்,வேட்பாளர் முரசொலி யுடன் நடை பயிற்சி சென்ற முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைக ளுடன் செல்பி , வாலிபால் விளையாட்டு என சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக வாக்கிங் வந்தவர்களிடமும் பொதுமக்களிடமும் வாக்கு சேகரித் தார். பின்னர் அங்கிருந்து காமராஜ் மார்க்கெட்டுக்குச் சென்று வியாபாரி களிடமும் பொதுமக்களிடமும் வாக்கு கேட்டு விட்டு,கீழ ராஜ வீதியில் உள்ள டீக்கடை ஒன்றில் கட்சியினருடன் டீ குடித்தார்.
பின்னர் தங்கும் விடுதிக்கு வந்த பிறகு 16 விவசாய அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, எம். எஸ். சுவாமிநாதன் பரிந் துரையை ஒன்றிய அரசு அமல்படுத்த வலியுறுத்த வேண்டும், தமிழ்நாட்டு நதி களை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *