விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தலைமைச் செயலகத்தை விவசாயிகள் முற்றுகை: நள்ளிரவிலும் போராட்டம்!

1 Min Read

சென்னை, ஜூலை 28- விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தலைமைச் செயலகம் முன்பு அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் போராட்டம் இரவு வரை நீடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தவெக தேர்தல் அறிக்கையின்படி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து விவசாயக் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், சென்னை தலைமைச் செயலகம் முன் நேற்று (27.7.2026) மாலை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் அய்யாக்கண்ணு கூறியதாவது:

2022ஆம் ஆண்டு முதல் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து நிதி நிறுவனங்களிலும் பெற்றுள்ள விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு வழங்காத கருநாடக அரசு மீது தமிழ்நாடு அரசு உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, ரூ.1 லட்சம் கோடி நஷ்டஈடு பெற்று அதை தமிழ்நாடு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். எங்களது கோரிக்கைகளை முதலமைச்சரிடம் நேரடியாக எடுத்துரைப்பதற்காக நேற்று (27.7.2026) காலை அவரை சந்திக்க வந்தோம். ஆனால், காவல்துறை தலைமை இயக்குநர் சார்பில் முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக கூறி, எங்களை வீட்டு சிறையில் வைத்தனர்.

அதன் பின்னரும் இதுவரை முதலமைச்சரை சந்திக்க எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. இதனால் வேறு வழியின்றி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். மேலும், விவசாயிகளின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் விவ சாயிகளின் போராட்டம் நள்ளிரவிலும் நீடித்தது. தலைமை செயலகம் முன் உள்ள பூங்காவிலேயே அவர்கள் படுத்துக் கிடந்தனர். இன்று (28.7.2026) காலை முதலமைச்சர் மற்றும் வேளாண்மை துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *