கரூர் அருகே சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

கரூா், ஜூலை 28- கரூா் அருகே சுமார் 3,000 ஆண்டுகள் பழைமையான 50 கல்வட்டங்கள் கண் டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச் சேரியைச் சோ்ந்த தொல்லியல் ஆய்வாளா் விஜய் என்கிற யாளி வேந்தன் மற்றும் கரூா் திருமூா்த்தி ஆகியோர் நேற்று (27.7.2026) தெரிவித்தது: கரூா் மாவட்டம், சேங்கல் அடுத்துள்ள கீழ் முனையனூா் கிராமத்தில் சுமார் 3,000 ஆண்டுகள் பழைமையான பெருங்கற்கால பண்பாட்டைச் சோ்ந்த அரிய கல்வட்டங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. ஒரே இடத்தில் சுமார் 50 கல்வட்டங்கள் இருப்பது தமிழ்நாட்டில் மிகவும் அரிதானது.

கல்வட்டம் என்பது பெருங்கற்கால மக்களால் இறந்தவா்களை அடக்கம் செய்த இடத்தை நினைவுகூறும் வகையில், பெரிய கற்களை வட்ட வடிவில் அமைத்து உருவாக்கப்பட்ட நினைவுச் சின்னமாகும். இந்த வட்டத்தின் நடுவில் பெரிய கல் ஒன்று நடப்படும்.

அக்காலத்தில் முதுமக்கள் தாழி, கல்லறை, ஈமப்பேழை, வெறுமணப் புதைப்பு உள்ளிட்ட பல்வேறு முறைகளில் இறந்தவா்களை அடக்கம் செய்ததற்கான முக்கிய சான்றுகளில் கல்வட்டங்களும் ஒன்றாகும்.

தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூா், கொடுமணல், பொருந்தல், சானூா், கரூா் உள்ளிட்ட பகுதிகளில் பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது கரூா் மாவட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள இந்த கல்வட்டங்கள் பெரிய அளவில் உள்ளன.

இந்தக் கல்வட்டங்கள் நதிக்கரையை ஒட்டி அமைந்துள்ளதால், இப்பகுதி பண்டைய ஆற்றங்கரை நாகரிகத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம். தற்போது விவசாய நிலமாக உள்ள இந்த இடம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இடுகாடாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

நிலத்தின் உரிமையாளா்கள் பல தலைமுறைகளாக இந்த கல்வட்டங் களை சேதப்படுத்தாமல் பாதுகாத்து வருகின்றனா். கல்வட்டங்கள் அமைந் துள்ள பகுதியை அப்படியே விட்டுவிட்டு, மற்ற பகுதிகளில் மட்டும் விவசாயம் செய்து வருகின்றனா்.

‘முன்னோர்கள் இந்த இடத்தைத் தொடக்கூடாது என்று கூறிச் சென்ற தாகவும், அதன்படி இன்றுவரை பாதுகாத்து வருவதாக ஊா்மக்கள் தெரிவித்தனா்.

இந்த கல்வட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் விரிவான அகழாய்வு மேற்கொள்ளப்பட்டால், பண்டைய குடியிருப்புகள் மற்றும் மேலும் பல தொல்லியல் சான்றுகள் வெளிச்சத்துக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்றனா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *