கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம்
‘நீட்’டை அறவே ரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்கு இல்லையா?
மாணவர்கள் ஆதங்கம்
புதுடில்லி, ஜூலை 27 ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியது. டில்லியில் நடந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் கைவிடப்பட்டது. இதேபோல் சென் னையில் நடந்த போராட்டமும் முடிவுக்கு வந்தது.
போராட்டக்களத்தில் நீட் தேர்வை அமைச்சர் பதவியைவிட்டு விலகி தடை செய்ய வேண்டும் என பதாகைகள் வைத்து போராட்டத்தை நடத்திவிட்டு, இப்போது ஒன்றிய அமைச்சர் பதவியை விட்டு விலகியவுடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தை முடித்துக் கொள்வதா? என்றும், இந்த போராட்டம் நீட் ரத்துக்கான போராட்டம் இல்லையா? என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த இளைஞர்கள் – மாணவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிக்காட்டினர்.
