வாரணாசி, ஜூலை 27- கங்கையில் பிரியாணி சாப்பிட்ட 14 பேர் 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்திற்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் வாரணாசி கங்கை நதியில், ரமலான் நோன்பு துறப்பதற்காக சிலர் படகில் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு, எலும்புகளை ஆற்றில் வீசி இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக இந்து அமைப்பு காவல்துறையினர் புகார் அளித் தனர். இதன் பேரில் 14 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். வாரணாசி நீதிமன்றம் இவர்களுக்கு பிணை வழங்க மறுத்த நிலையில், கடந்த மே மாதமே அலகாபாத் உயர்நீதிமன்றம் இவர்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற தேசிய சட்டப் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் உச்சநீதிமன்றம் நீதிபதி உஜ்ஜல் புயான், நாட்டின் தற்போதைய கருத்துச் சுதந்திர நிலை குறித்து பேசியதாவது:-
கங்கை நதியில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவதைத் தடை செய்ய நாட்டில் எந்தச் சட்டமும் இல்லை. பிரியாணி சாப்பிடுவது ஒரு குற்றமே கிடையாது; அதை ஒருபோதும் குற்றமாக பார்க்க முடியாது. குற்றம் அல்லாத ஒரு செயலுக்காக 14 பேரை கைது செய்து, 3 மாதங்கள் பிணை தராமல் சிறையில் அடைத்தது வேதனையளிக்கிறது. நாட்டில் விமர்சனம் செய்வதும், அமைதியான முறையில் போராடுவதும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை ஆகும்.
இவ்வாறு அதில் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டு நடந்த விபத்துகளில்
நாளொன்றுக்கு 502 பேர் வீதம்
1.8 லட்சம் பேர் உயிரிழப்பு
1.8 லட்சம் பேர் உயிரிழப்பு
புதுடில்லி, ஜூலை 27 மக்களவையில் ஒன்றிய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் சமர்ப்பித்த புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ள தாவது: நாடு முழுவதும் கடந்த 2025-இல் சாலை விபத்துகளில் 1.8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதாவது நாளொன்றுக்கு 502 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழப்புகளில் உ.பி.யில் மிக அதிக உயர்வு பதிவாகியுள்ளது. அங்கு 2024-இல் 24,118 ஆக இருந்து உயிரிழப்பு, கடந்த ஆண்டில் 27,550 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் பஞ்சாபில் சாலை விபத்து மரணம் கணிசமாக குறைந்துள்ளது. அங்கு 2024-இல் 4,759 ஆக இருந்த உயிரிழப்பு கடந்த ஆண்டில் 3,062 ஆக குறைந்துள்ளது. 2025-இல் விபத்து களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 5.3 சத வீதம் அதிகரித்து 5.1 லட்சத்துக்கு மேல் பதிவாகியுள்ளது. மேலும் உயிரிழப்பு 3.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
