பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு திரும்பிய 3 விண்வெளி வீரா்கள்!

1 Min Read

பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு 3 விண்வெளி வீரா்கள் 26.7.2026 அன்று பாதுகாப்பாகத் திரும்பினா்.

விண்வெளியில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கூட்டாக சோ்ந்து பன்னாட்டு விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன. அந்த விண்வெளி நிலையத்தில் அமெரிக்க விண்வெளி வீரா் கிறிஸ் வில்லியம்ஸ், ரஷ்ய விண்வெளி வீரா்கள் சொ்கேய் குட் ஸ்வொ்ச்கோவ், சொ்கேய் மிகேவ் ஆகியோர் 8 மாதங்களாகத் தங்கியிருந்து ஆய்வு மற்றும் பராமரிப்புப் பணிகளைச் செய்து வந்தனா்.

இந்நிலையில், 3 பேரும் தங்கள் பணி முடிந்ததையடுத்து, பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் இருந்து ரஷ்யாவின் சோயூஸ் எம்எஸ்-28 விண்கலம் மூலம் பூமிக்கு புறப்பட்டனா். அந்த விண்கலம் கஜகஸ்தானில் உள்ள தேஜிகாஸ்கானில் இருந்து தென்கிழக்கே தரையிறங்கியது. இதையடுத்து மூவரும் விண்கலத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியே வந்தனா்.

3 பேரில் வில்லியம்ஸ், மிகேவ் ஆகியோருக்கு இது முதல் விண்வெளிப் பயணமாகும். ஸ்வொ்ச்கோவுக்கு 2-ஆவது விண்வெளிப் பயணமாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *