திருவையாறு, ஜூலை 26- தஞ்சாவூர் மாநகர, திருவையாறு ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் 23-07-20226 அன்று மாலை 6.30 மணி அளவில் தஞ்சாவூர் கீழராஜவீதி பெரியார் இல்லத்தில் நடைபெற்றது.
தஞ்சை மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார்செல்வன் கடவுள் மறுப்புக் கூறினார்.
தஞ்சை மாநகர செயலாளர் இரா. வீரக்குமார் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையேற்று உரையாற்றினார்.
தஞ்சை மாவட்ட காப்பாளர் மு. அய்யனார், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட துணைத் தலைவர் பா.நரேந்திரன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
மாநில கழக ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தின் நோக்கம் பற்றியும், ஆசிரியர் அவர்களின் அளப்பரிய பணிகள் குறித்தும், நீட், EWS ரத்து செய்ய வலி யுறுத்தி வருகை தரும் இருசக்கர வாகன பரப்புரைப் பேரணியை வரவேற்பது குறித்தும் தொடக்க உரையாற்றினார்.
வீ.அன்புராஜ் உரை
எதிர்பாராத விதமாக கலந்துரை யாடல் கூட்டத்தில் பங்கேற்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் வழிகாட்டுதல் உரை ஆற்றினார்.
மருத்துவ மாணவர்களின் கனவை சிதைக்கும், நீட்தேர்வு வரப்போகிறது என்று எச்சரித்தவர் ஆசிரியர் அவர்கள்,
நாம் தொடங்கிவைத்த நீட் எதிர்ப்பு இன்று நாடு முழுவதும் பற்றி எரிகிறது,
இன்று பலர் நாங்கள்தான் போராடி வருகிறோம் என நம்மை மறைக்கப் பார்க்கிறார்கள்,
ஜூலை 4 ஆம் தேதியே சேலம் பொதுக் குழுவில் நீட் எதிர்ப்பு இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் ஆறுமுனையில் நடைபெறும் என அறிவித்து 30.7.2026 தொடங்கிட ஏற்பாடுகள்நடைபெறுகிறது என்றும்,
மாவட்ட பொறுப்பாளர்கள் வாகனப் பரப்புரைக் குழுவினரைத் தங்கள் மாவட்ட எல்லையிருந்து பாதுகாப்பாக அழைத்துவர வேண்டும்,
நீட் எதிர்ப்புப் பயணம் வருவதை அப்பகுதி காவல்நிலையத்திற்கு எழுதிக் கொடுப்பதுடன், சுவரொட்டி, உள்ளூர் பத்திரிக்கை, சமூக ஊடகங்களில் பரப்பிடவேண்டும்,
குறிப்பாக எதற்கும் தயார் என அறிவித்த அறப்போராட்ட வீரர்களை இப்பயணத்தில் பங்கேற்கச் செய்ய வேண்டும்,
நீட் எதிர்ப்புப் பயணத்தில் பங்கேற்கும் தோழர்கள் கட்டாயம் தலைக்கவசம் அனிய வேண்டும்,
ஓட்டுநர் உரிமம், வாகனத்திற்கு காப்பீடு உள்ளிட்ட அனைத்து சான்றிதழ் களும் இருக்க வேண்டும்,
பரப்புரைக் குழுவில் மருத்துவர் அல்லது செவிலியர் பங்கேற்க வேண்டும்,
–ஒவ்வொரு குழுவினரும் தங்கள் பகுதிகளில் உள்ள கழக வழக்குரைஞர் களைத் தொடர்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தமது உரையில் குறிப்பிட்டார் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள்.
தொடர்ந்து திருவையாறு ஒன்றியத் தலைவர் ச.கண்ணன், ஒன்றிய செயலாளர் துரை.ஸ்டாலின், திருவையாறு நகரத் தலைவர் ஆ. கவுதமன், ஒன்றிய இளைஞரணி தலைவர் அ.மோகன்ராஜ், திருப்பழனம் க.இரணியன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், புதிய பேருந்து நிலைய பகுதி தலைவர் சாமி. கலைச்செல்வன், செயலாளர் வே.துரை, விடுதலை வாசர் வட்ட செயலாளர் ஏ.வி. என்.குணசேகரன், விடுதலை வாசகர் வட்டத் துணைத் தலைவர் விஸ்வநாதன், செயற்குழு உறுப்பினர் குழந்தைசாமி, கரந்தை பகுதி தலைவர் விஜயன், ஒன்றிய ப.க தலைவர் இராமகிருஷ்ணன், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ச.அஞ்சுகம், மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் மலர்கொடி, மாவட்ட இளைஞரணி தலைவர் ஆ.பிரகாஷ், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் க.அன்பழகன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ச.சிந்தனைஅரசு, மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ச.சந்துரு, மாவட்ட பெரியார் வீர விளையாட்டு கழக செயலாளர் சிகாமணி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பாவலர் பொன்னரசு, மாவட்ட தலைவர் ச.அழகிரி, மாவட்ட ப.க ஆ.லட்சுமணன், தஞ்சை மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர்பகுத்தறிவுதாசன், பிள்ளையார்பட்டி முருகேசன், பெரியார் சமூக காப்பணி இயக்குநர் பொய்யாமொழி, திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா. செந்தூரபாண்டியன், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் இரா.வெற்றி குமார், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு.பழனிவேல், குடந்தை மாவட்ட காப்பாளர் தாராசுரம் இளங்கோவன், மாநில கலைத்துறை செயலாளர் ச. சித்தார்த்தன், மாநகரச் செயலாளர் இரா. வீரக்குமார் மாநகரத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன் கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.
மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார் செல்வன் நன்றி கூறினார்.
தஞ்சாவூர் வஸ்தா சாவடி செந்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக் குமாரின் மாமியார் எடை மேலையூர் லெ.ரூபாவதி ஆகியோர் மறைவிற்கு கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
ஜூலை-4 சேலத்தில் நடைபெற்ற கழக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என தீர்மானிக்கப் படுகிறது.
“நீட், “EWS உயர்ஜாதியினருக்கான இட ஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு புதுச்சேரி தழுவிய அளவில் நடைபெறும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயண வரவேற்புக் கூட்டங்களை தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு, கண்டியூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் மிக எழுச்சியுடன் நடத்துவது எனவும், தஞ்சாவூர் மாவட்ட எல்லையான திருப்பழனத்தில் வரவேற்று திருக்கானூர் பட்டி வரை கழகத் தோழர்கள் உடன் சென்று வழி அனுப்புவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
தந்தை பெரியார் அவர்களின் 148ஆவது பிறந்தநாள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் {டிசம்பர் 2) 94ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் திருவையாறு பகுதிகளில் சுவரெழுத்து விளம்பரங்களை செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
