கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் மீண்டும் நிராகரிப்பு: ஒன்றிய அரசு

1 Min Read

டில்லி, ஜூலை 26- கோவை மற்றும் மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு மீண்டும் அனுப்பிய பரிந்துரையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது.

தமிழ்நாடு அரசு கடந்த மே மாதம் இத்திட்டங்களுக்கான விரிவான அறிக்கையை தயாரித்து, ஒப்புதலுக்காக ஒன்றிய அரசிற்கு மீண்டும் அனுப்பி வைத்திருந்தது. இந்நிலையில், தற்போது இந்த இரண்டு நகரங்களின் மெட்ரோ திட்டங்களையும் ஒன்றிய அரசு நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

மக்கள் தொகை

கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களின் தற்போதைய மக்கள் தொகை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அளவுகோல்களை எட்டவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டு வந்தாலும், மக்களின் பயண நேரத்தில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது அல்லது பயண நேரம் பெரிதாகக் குறையாது என்று ஒன்றிய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இத்திட்டங்கள் குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து வந்த நிலையில், ஒன்றிய அரசின் இந்த மீண்டும் எடுக்கப்பட்டுள்ள நிராகரிப்பு முடிவு தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *