கழகக் களத்தில்…!

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

27.07.2026 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்வு 1105 நன்னிலம் முனைவர் சு.ஆறுமுகம் நூல்கள் வெளியீட்டு விழா

சென்னை: மாலை 5.00 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்) தலைமை * பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) * “நெறிபட வாழ்தலே அறம் – நூல் வெளியீடு & திறனாய்வு – பேராசிரியர் முனைவர் உ.பிரபாகரன் * மேனாள் தலைவர், அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை. தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் * நூலைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை: முனைவர் வா.நேரு. (மாநிலத் தலைவர், புகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * ‘மூடநம்பிக்கைகள் பலவிதம் அவை ஒவ்வொன்றும் ஒருவிதம்’ * நூல் வெளியீடு & திறனாய்வு: முனைவர் த.ஜெயக்குமார் (பேராசிரியர் (ப.நி.). பெரியார் நெறியாளர். பெரியாரியச் சமூக செயற்பாட்டாளர்) *நூலைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை:  ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * ஏற்புரை: நூலாசிரியர் முனைவர் சு.ஆறுமுகம் *நன்றியுரை: பொறியாளர் ஆ.தமிழ்ச்செல்வன் கேளம்பாக்கம் * நிகழ்ச்சி ஏற்பாடு: புதுமை இலக்கியத் தென்றல் & பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.

திருவாரூர் மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்

திருவாரூர்: மாலை 5.00 மணி *இடம்: தமிழர் தலைவர் அரங்கம், திராவிடர் கழகம், திருவாரூர் தலைமை அலுவலகம் *வரவேற்புரை: கோ.பிளாட்டோ (மாவட்ட செயலாளர்) *தலைமை: எஸ்.எஸ்.எம்.கே. அருண்காந்தி  (மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்),
வீர.கோவிந்தராசு (மாவட்ட காப்பாளர்), அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), தேவ.நர்மதா (மாநில திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர்) *கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *பொருள்: சேலம் பொதுக்குழு கூட்ட தீர்மானங்களைச் செயல்படுத்துவது குறித்தும், ஜூலை 30 அன்று மன்னார்குடியில் இருந்து தொடங்கி நடைபெற இருக்கும் நீட் எதிர்ப்பு இரு சக்கர வாகன பரப்புரை பயண தோழர்களுக்கு வரவேற்பது அளித்து கூட்டம் நடத்துவது குறித்தும், கழக வளர்ச்சி பணிகள் குறித்தும், விடுதலை சந்தா சேர்ப்பு குறித்தும், மாணவர் கழகம் மற்றும் இளைஞரணி தோழக்ளுக்கு தொழில்நுட்ப பயிற்சி நடத்துவது தொடர்பாகவும் *நன்றியுரை: செ.இரவிக்குமார் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், திருவாரூர் மாவட்டம்.

30.7.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2609

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: மஞ்சை வசந்தன் (எழுத்தாளர்) * தலைப்பு: “திருக்குறளை இழிவுபடுத்தினாரா பெரியார்” (பொழிவு-6) * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *