சிந்தாமணியூர் கி.வசந்தா படத்திறப்பு – நினைவேந்தல்

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

மேட்டூர், ஜூலை 26- மேட்டூர் மாவட்டம் திராவிடர் கழகத்தின் மேனாள் பொதுக்குழு உறுப்பினரும் மேனாள் மகளிர் அணி தோழருமான சிந்தாமணியூர் பாரப்பட்டி கி. வசந்தா அவர்கள் உடல் நலம் குன்றி கடந்த 17-07-2026 அன்று மறைந்தார்.
நேற்று எடப்பாடியில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் அவர்கள் எழுதிய “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” என்ற புத்தக வெளியீட்டு விழாவில் தோழர் கி.வசந்தா அவர்களின் படத்திறப்பு நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது.
படத்தை கழகத்தின் காப்பாளர் பழநி புள்ளையண்ணன் திறந்து வைத்தார். சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன் அவரது கழக செயல்பாடுகளை பற்றி எடுத்துரைத்தார் நிகழ்விற்கு மாவட்ட தலைவர் க.நா. பாலு, மாவட்ட செயலாளர் ப.கலைவாணன் முன்னிலை வகித்தார்கள். சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜூ, ஆத்தூர் மாவட்ட தலைவர் சுரேஷ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் மேட்டூர், சிந்தாமணியூர், ஓமலூர், சின்னப்பம்பட்டி, எடப்பாடி தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *