இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு மக்களவையில் ஒன்றிய அரசு தகவல்!

1 Min Read

மக்களவையில் ஒன்றிய அரசு தகவல்!

புதுடில்லி, ஜூலை 25 இந்தியாவில் கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளதாக ஒன்றிய அரசு மக்களவையில் தெரிவித்து உள்ளது.

மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, ஒன்றிய சுகாதாரத்துறை இணையமைச்சர் அனுப்ரியா படேல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்ப தாவது: இந்தியாவில் 2014-ஆம் ஆண்டில் 387-ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை, தற்போது 844-ஆக உயர்ந்துள்ளது.  இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை இடங்கள் 51,348-லிருந்து 1,39,489-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் 31,185-லிருந்து 86,360-ஆக உயர்த்தப்பட்டுள்ளன.

மேலும், தேசிய மருத்துவ ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘மாவட்ட வசிப்பிட திட்டத்தின்’ கீழ், முதுகலை மருத்துவ மாணவர்கள் தங்களது பயிற்சிக் காலத்தில் 3 மாதங்கள் மாவட்ட மருத்துவமனைகளில் கட்டாயம் பணியாற்ற வேண்டும். கிராமப்புறங்கள் மற்றும் போதிய மருத்துவ வசதிகள் இல்லாத பகுதிகளில் சுகாதாரச் சேவைகளை வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *