சிறையில் அடைக்கப்பட்டிருந்த குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் உள்ளிட்ட 51 தமிழர்களைச்
சிங்கள அரசு கொன்ற நாள் இன்று (25.07.1983)
சிங்கள அரசு கொன்ற நாள் இன்று (25.07.1983)
தமிழீழ வரலாற்றில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான குட்டிமணி என அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று (25.7.1983). இவர் இலங்கைக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டார். இவர் சிறைக் காவலில் வைக்கப்பட்டிருந்த போது, 1983ஆம் ஆண்டில் வெலிக்கடை சிறையில் மற்றொரு டெலோ தலைவர் நடராஜா தங்கதுரை, ஜெகன் உள்பட 51 தமிழ்க் கைதிகளுடனும் சிங்கள கைதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர். இது சிங்கள கொடுங்கோல் ஆட்சியாளர் களால் தூண்டப்பட்டு நடத்தப்பட்ட படுகொலையாகும்.
உலக கருவியல் நிபுணர் நாள்
[உலக அய்.பிஎஃப் (IVF) நாள் இன்று (ஜூலை 25, 1978)]
[உலக அய்.பிஎஃப் (IVF) நாள் இன்று (ஜூலை 25, 1978)]
1978 ஆம் ஆண்டு, முதல் குழந்தையானது அய்.வி.எஃப் IVF செயல்முறை மூலம் பிறந்ததால் இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. லூயிஸ் ஜாய் பிரவுன் இன் விட்ரோ கருத்தரித்தல் மூலம் பிறந்த முதல் குழந்தை ஆவார். எனவே, இந்த சிறப்பு நாளை நினைவுகூரும் வகையில், உலக கருவியல் நிபுணர் நாள் ஒவ்வொரு ஆண்டும் அதே நாளில் கொண்டாடப்படுகிறது.
உலக கருவியல் நிபுணர் நாளானது, கருவியல் நிபுணர்கள் பற்றியும், இன் விட்ரோ கருத்தரித்தல் (IVF) செயல்முறை குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது.
