தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தவேண்டியது என்ன?
மு.க.ஸ்டாலின்
பட்ஜெட் கூட்டத்தொடரின்போது பேரவையில் கவனமாக செயல்பட வேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், மகளிருக்கு ரூ.2,500, ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள், வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4,000 உள்ளிட்ட தவெகவின் வாக்குறுதிகள் நிதி நிலை அறிக்கையில் இடம்பெறாவிட்டால் அதுகுறித்து வலியுறுத்த வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடியின் பயத்தை பார்க்க முடிகிறது: நடிகர் பிரகாஷ் ராஜ்
பிரதமர் மோடியின் பயத்தை தன்னால் பார்க்க முடிகிறது என பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மோடி வெளியிட்ட காணொலி காட்சிப் பதிவை மேற்கோள் காட்டி இதை குறிப்பிட்டுள்ளார். மேலும், இதற்காக தனது கரப்பான் பூச்சிகளுக்கு நன்றி எனவும் பதிவிட்டுள்ளார். முன்னதாக இளைஞர்களின் போராட்டத்துக்கு அவர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருந்தார்.
மாணவர்கள் தேசத்தின்
விரோதிகளா? சோனியா
விரோதிகளா? சோனியா
நீதி கேட்டு போராடும் மாணவர்களை தேசத்தின் விரோதிகள் போல பிரதமர் மோடி நடத்துவதாக சோனியா காந்தி விமர்சித்துள்ளார். இதுபற்றி நாளிதழில் கட்டுரை எழுதியுள்ள அவர், கல்வித்துறையில் சீர்த்திருத்தம் தேவை என மாணவர்கள் வலியுறுத்தினால், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதில் கோழைத்தனமாக ஒரு கொடூர தாக்குதலை அரசு நடத்துகிறது. இதன்மூலம், மோடி அரசின் உண்மை முகத்தை மாணவர்கள் அடையாளம் கண்டுவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
