செய்திச் சுருக்கம்

மகள்களின்
ஆடைகளையே கிழிப்பீர்களா?

‘‘உங்கள் மகள்களின் ஆடைகளையே கிழிப்பீர்களா’’ என மக்களவையில் அகிலேஷ்  ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். டில்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது பேசிய அகிலேஷ், ‘‘நீங்கள் அந்த மாணவர்களிடம் பேச விரும்பியிருந்தால், ஏன் அதை முன்னரே செய்யவில்லை? மாணவர்கள் மீது தடியடி நடத்த உங்களுக்கு எப்படி துணிவு வந்தது?’’ என சாடினார்.

காயமடைந்த மாணவர்களைப் பார்க்கச் சென்றவர்களைத் தடுப்பதா?

புதுடில்லி, ஜூலை 23 டில்லியில் காவல் துறையினர் தாக்குதலில் காயமடைந்த மாணவர்களை மருத்துவ மனையில் சந்திக்க ஒன்றிய அரசு அனுமதி மறுப்பதாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு, முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி  டில்லியில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதில், பலர் காயமடைந்தனர்.

டில்லி ராம்மனோகர் லோகியா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள்  ஆ.ராசா, தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், கிரிராஜன், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் சந்திக்க சென்றனர்.ஒன்றிய அரசின் நிர்பந்தத் தால் மாணவர்களை சந்திக்க காவல்துறை அனும திக்கவில்லை. இதையடுத்து, மாணவர்களின் உறவினர்களிடம் நலம் விசாரித்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. கொறடா ஆ.ராசா,தி.மு.க. தலைவரின் அறிவுறுத்தலின் பேரில் மாணவர்களின் நலன் குறித்து விசாரிக்க சென்றோம், ஆனால், தங்களை அனுமதிக்க வில்லை என்றார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்க்க கூட அனுமதிக்காத ஒன்றிய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

 

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *