‘தமிழ்நாட்டில் ரயில் பாதை திட்டப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவதில் தாமதம்’

1 Min Read

சென்னை, ஜூலை 24– தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி, 8 புதிய பாதைகள், 3 அகல பாதைகள், 8 இரட்டை பாதை திட்டங்களை செயல்படுத்த, 27,282 கோடி ரூபாய் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

தமிழ்நாடு ரெயில் திட்டங்களுக்கு மொத்தம் 11,391 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், ஆனால், மாநில அரசு இதுவரை, 2,910 ஏக்கர்தான் ஒதுக்கி இருப்பதாகவும், இதனால் ரயில் பாதை திட்டப் பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் ரயில்வே அமைச்சகத்தின் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே பயனாளர் குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறியதாவது:-

“ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் ரெயில் திட்டங்களுக்கு, ஆண்டுதோறும் கணிசமான அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. நடப்பு நிதி ஆண்டில், தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு, 7,611 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இருப்பினும், ரயில்வே திட்டங்களுக்கு, நிலம் கையகப்படுத்தும் பணி முக்கிய தடையாக உள்ளது.

தமிழ்நாட்டில் நடக்கும் பல்வேறு ரயில் பாதை திட்டங்களுக்கு, 11,391 ஏக்கர் நிலம் தேவை. தற்போது வரை, 26 சதவீத நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்பட்டு உள்ளன.”

இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *