பொறியியல் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் ஏஅய்சிடிஇ அறிவிப்பு

3 Min Read

பொறியியல் மாணவர்களுக்கு

 ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகை

 இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

ஏஅய்சிடிஇ அறிவிப்பு

சென்னை, ஜூலை 24- “பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு 3 விதமான கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படுவதாகவும் அதற்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் எனவும்” அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.

பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமா படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஅய்சிடிஇ) பிரகதி, சக்சம், ஸ்வநாத் என 3 விதமான கல்வி உதவித் தொகைகளை (ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம்) வழங்குகிறது.

இதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருக்க வேண்டியது அவசியம். பிரகதி கல்வி உதவித் தொகை பெற மாணவிகளும், சக்சம் உதவித் தொகைக்கு மாற்றுத் திறனாளிகளும், ஸ்வநாத் உதவித்தொகை பெற ஆதரவற்ற மாணவர்கள், கரோனாவில் பெற்றோரை இழந்தவர்கள், போரில் இறந்த ராணுவத்தினரின் குழந்தைகள், கொடிய நோய்களால் பாதிக்கப்பட்ட பெற்றோரைக் கொண்ட குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.

இந்நிலையில் நடப்புக் கல்வி ஆண்டில் (2026- 2027) பிரகதி, சக்சம், ஸ்வநாத் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கும், ஏற்ெகனவே உதவித்தொகை பெற்றும் வரும் மாணவர்கள் புதுப்பிப்பதற்குமான அறிவிப்பை ஏஅய்சிடிஇ வெளியிட்டுள்ளது.

நடப்புக் கல்வி ஆண்டில் பி.இ, பி.டெக் மற்றும் பொறியியல் டிப்ளமா படிப்புகளில் சேரும் தகுதியுள்ள மாணவ-மாணவிகள் www.scholarships.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி அக்டோபர் 31ஆம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

இது தொடர்பான முழு விவரங்களையும் www.aicte.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என ஏஅய்சிடிஇ உறுப்பினர் செயலர் ஷ்யாமா ரத் தெரிவித்துள்ளார்.

 

தி.மு.க. ஆட்சியில் ஒப்புதல் பெறப்பட்ட

சோலார் மின்திட்டங்கள் நிறுத்தி வைப்பு!

கோவை, ஜூலை 24- கோவை பகுதிகளில் ஒப்பந்தம் செய்யப்பட்ட சோலார் மின்உற்பத்தி திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்தத் திட்டங்களில் முதலீடு செய்ய நிறுவனங்கள் தயங்கும் நிலை உள்ளது.

சோலார் மின் உற்பத்தி

நவீன காலத்தில் எந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எனவே அதை இயக்கத் தேவையான மின்சார தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை பூர்த்தி செய்ய காற்றாலை, சோலார் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின் உற்பத்தி திட்டங்கள் உதவுகின்றன. தமிழ்நாட்டில் 7 ஆயிரம் மெகாவாட்டுக்கு அதிகமாக சோலார் மின் உற்பத்தி செய்ய கட்டமைப்பு வசதி உள்ளது. கோவையிலும் சோலார் மின் உற்பத்தி கட்டமைப்புகள் தொழில் நிறுவனங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் ஒப்புதல் பெறப்பட்ட சோலார் மின் உற்பத்தி திட்டங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து சோலார் மின் உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது:-

நிறுத்தி வைப்பு

கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் குறிப்பாக சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுவதற்கு முன் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைப்பதற்காக சோலார் மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. தேர்தலுக்கு பிறகு த.வெ.க. தலைமையிலான அரசு பொறுப்பு ஏற்றது. இந்த நிலையில் தி.மு.க. ஆட்சி காலத்தில் ஒப்புதல் பெறப்பட்ட சோலார் மின் உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இதனால் சோலார் மின் உற்பத்தித்துறையில் புதிதாக முதலீடு செய்ய பலரும் தயங்குகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர், மின்சாரத்துறை அமைச்சர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் சோலார் மின் உற்பத்தி திட்டங்களில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *